சார்பட்டா பரம்பரை ரவுண்ட் 2 – ஷூட்டிங்கை தொடங்கிய படக்குழு… வைரலாகும் பதிவு!
Sarpatta Parambarai Round 2 Movie Update | இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் சார்பட்டா பரம்பரை. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் தொடங்கியதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு தெரிவித்தது தற்போது வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் பா.ரஞ்சித். இவர் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிறகு தமிழ் சினிமாவில் அட்டக்கத்தி என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளியான மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது மற்றும் தங்கலான் என அனைத்துப் படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து ஹிட் படங்களை இயக்கி வரும் பா.ரஞ்சித் இயக்கத்தில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படம் வேட்டுவம். இது ஒரு பீரியட் ட்ராமா ஆக்ஷன் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த வேட்டுவம் படத்தில் நடிகர்கள் தினேஷ், ஆர்யா, ஷோபிதா துலிபா என பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார். மேலும் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது வெளியீட்டிற்கான போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.




சார்பட்டா பரம்பரை ரவுண்ட் 2 – ஷூட்டிங்கை தொடங்கிய படக்குழு:
இந்த நிலையில் இயக்குநர் பா ரஞ்சித் தனது இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற சார்பட்டா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க தயாராகி உள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் கடந்த 2021-ம் ஆண்டு கொரோணா காலக்கட்டத்தில் உருவானதால் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியானது. அந்தப் படத்தை ஓடிடியிலேயே ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். பலர் இது திரையரங்குகளில் வெளியாகி இருந்தால் வசூலில் சாதனைப் படைத்து இருக்கும் என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே சார்பட்டா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பேச்சு தொடர்ந்து நடைப்பெற்றுக் கொண்டே இருந்தது. இந்த நிலையில் இன்று இயக்குநர் பா. ரஞ்சித் படத்தின் போஸ்டரை வெளியிட்டு படப்பிடிப்பு தொடங்கியதாக தெரிவித்துள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… Shivarajkumar: ஒருமணி நேரமாக தூக்கம் வரவில்லை.. விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பற்றி பேசிய சிவராஜ்குமார்!
இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
The origin of Sarpatta Parambarai begins 🥊#SarpattaParambaraiRound2#SP2 💥 pic.twitter.com/a6b7v9VZYL
— pa.ranjith (@beemji) September 28, 2026
Also Read… ஷமாவின் ஸ்டாம்ப் டாஸ்க் விவகாரம்.. ஜேசனை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி – புரோமோ இதோ!