தர்மன் படத்தின் 3-வது ஷெடியூல் முடிவடைந்தது… இயக்குநர் வெளியிட்ட பதிவு!
Dharman Movie Shooting Update | தமிழ் சினிமாவில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 173-வது படமாக உருவாகி வருகின்றது தர்மன். இந்தப் படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து எழுதி இயக்கி வரும் நிலையில் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் படங்கள் திரையரங்களில் வரிசையாக வெளியாகி வருகின்றது. அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் ஜெயிலர் 2 படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் எழுதி இயக்கி உள்ள நிலையில் படம் வருகின்ற 15-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் ரஜினிகாந்த் தனது 173-வது படமான தர்மன் படம் உருவாகி வருகின்றது.
அதன்படி இந்த தர்மன் படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து எழுதி இயக்கி வருகிறார். இந்தப் படத்தினை இயக்க முன்னதாக இரண்டு இயக்குநர்கள் பேசப்பட்டு விலகினர். அதனைத் தொடர்ந்து இறுதியாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து உறுதிசெய்யப்பட்டார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனங்களான ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மரிக் மீடியா சார்பில் தயாரிப்பாளர்கள் கமல் ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் இணைந்து தயாரித்து வருகின்றனர்.




தர்மன் படத்தின் 3-வது ஷெடியூல் முடிவடைந்தது:
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. மேலும் இந்தப் தர்மன் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிகர்கள் ராம் பொதினேனி, சிம்ரன், ராஷி கண்ணா மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.
மேலும் இந்த தர்மன் படம் தொடர்பான தகவல்களை படக்குழு வெளியிட்டு வரும் நிலையில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அஸ்வத் மாரிமுத்து புகைப்படங்களுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… Jailer 2: ஒன் நேம்… சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தின் 3வது பாடல் ரிலீஸ் அறிவிப்பு!
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
3rd schedule Wrapped ! 🌟🔥#Dharman pic.twitter.com/idBo270WJF
— Ashwath Marimuthu (@Dir_Ashwath) September 29, 2026