பிக்பாஸ் ரோப் டாஸ்கில் அஸ்மிதாவை கடுப்பேற்றும் சாவன்யா வேலு – வைரலாகும் வீடியோ
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் லீடர் எக்ஸிட் முறையில் வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க் மனநிலையை சோதிக்கும் விதமாக உள்ள நிலையில் தற்போது இரண்டாவது புரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் பல விசயங்களை நிகழ்ச்சி குழு புதிதாக புகுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு மிகவும் சர்ப்ரைஸாக இருந்த ஒன்று பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் அந்த வாரம் வீட்டின் லீடராக உள்ள நபர் டாஸ்கில் சரியாக பங்கெடுக்காத மூன்று போட்டியாளர்களை தேர்வு செய்ய வேண்டும். அவர்களின் புகைப்படங்களை லீடர் எக்ஸிட் போர்டில் வைக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் கூறும் போது அந்த போர்டில் உள்ள மூன்று நபர்களில் யார் வெளியேறினால் சரியாக இருக்கும் என்று வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் தங்களது வாக்குகளை செலுத்துவார்கள். அப்படி போட்டியாளர்களால் அதிக வாக்கைப் பெற்ற நபரை வீட்டில் இருந்து உடனே வெளியேற்றுவார் பிக்பாஸ்.
அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் முதல் வாரமே சாவன்யா வேலு வெளியேறிய நிலையில் அதனைத் தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது வாரங்களில் அடுத்தடுத்து ஜாவித் மற்றும் லக்ஷ்மி பிரியா ஆகியோர் வெளியேறினர். எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது போல அப்படி வெளியேறிய மூன்று பேரையும் வைல்கார்ட் போட்டியாளர்களாக நேற்று மீண்டும் வீட்டிற்குள் அனுப்பினர். வந்த போட்டியாளர்கள் வில்லங்கத்தையும் கூட்டிக்கொண்டே வந்தனர்.




பிக்பாஸ் ரோப் டாஸ்கில் அஸ்மிதாவை கடுப்பேற்றும் சாவன்யா வேலு:
வந்த போட்டியாளர்கள் மூன்று பேரும் கையில் ஒரு ரோப்பை கட்டியிருந்த நிலையில் மறு முனையை வீட்டில் உள்ள இன்னொரு போட்டியாளரை தேர்வு செய்து கட்ட வேண்டும் அப்படி சாவன்யா வேலு தேர்வு செய்தது அஸ்மிதாவை. இந்த ரோப்பை கலட்டினார் அவர்கள் பிக்பாஸ் வீட்டைவிட்டே வெளியேற வேண்டும். என்ன வேலையாக இருந்தாலும் அந்த ரோப்பை கட்டிக்கொண்டே செய்ய வேண்டும் என்பது பிக்பாஸின் கட்டளை.
இப்படி இருக்கும் நிலையில் இன்று வெளியான புரோமோ வீடியோவில் சாவன்யா வேலு தொடர்ந்து அஸ்மிதாவை கடுப்பேற்றும் விதமாகவே பேசி வருகிறார். மேலும் அவரை எரிச்சலடையச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் சாவன்யா தொடர்ந்து பேசும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… தமிழ் சினிமாவுக்கு தனி ஓடிடி தளம்? அமைச்சர் ராஜ்மோகன் பகிர்ந்த தகவல்
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day22 #Promo2 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision pic.twitter.com/kK5b9kvNSe
— Vijay Television (@vijaytelevision) September 28, 2026