பிக்பாஸில் குரூப்பிசம் பெண்கள் அணியிலும் இருக்கு… நேரடியாக பேசிய விஜய் சேதுபதி
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் மூன்றாவது வார முடிவான நேற்று விஜய் சேதுபதி போட்டியாளர்களிடையே பேசும் போது வீட்டில் ஆண்களிடையே மட்டும் இல்லாமல் பெண்களிடையேயும் குரூப்பிசம் இருப்பதாக வெளிப்படையாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 21 நாட்கள் முடிவடைந்து 22-வது நாளை எட்டி உள்ளது. அதன்படி மூன்று வாரங்கள் முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் வாரம் முழுவதும் போட்டியாளர்கள் விளையாட்டிலும், டாஸ்கிலும் அந்த வீட்டிற்குள்ளும் என்ன எல்லாம் செய்கிறார்கள் என்பது குறித்து நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பேசுவது வழக்கம். அந்த வகையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10) நிகழ்ச்சியிலும் மூன்றாவது வாரம் முழுவதும் போட்டியாளர்கள் என்ன எல்லாம் செய்தார்கள், அவர்களிடையே நிலவிய பிரச்சனைகள் குறித்தும் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் சேதுபதி தொடர்ந்து கேள்விகளை எழுப்பினார். மேலும் மூன்றாவது வாரம் கேப்டனாம இருந்த அவினாஷின் கேப்டன்ஸி எப்படி இருந்தது என்பது குறித்தும் வெளிப்படையாக பேசினார்.
அது மட்டும் இன்றி இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கிய போதே போட்டியாளர்களும் பார்வையாளர்களும் எதிர்பார்க்காத பல விசயங்கள் புதிதாக கொண்டு இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் லீடர் எக்ஸ்ட் போர்டில் இருந்து வெளியேறிய மூன்று போட்டியாளர்களும் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டுள்ளனர். அதுமட்டும் இன்றி நிகழ்ச்சியின் இறுதிக் கட்டத்தில் கொடுக்கப்படும் எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் இந்த வாரமே கொடுக்க உள்ளதாகவும் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.




பிக்பாஸில் குரூப்பிசம் பெண்கள் அணியிலும் இருக்கு:
அது மட்டும் இன்றி கடந்த வாரம் முழுவதும் பெண்கள் பலர் ஆண்களிடையே குரூப்பிசம் இருக்கு. அவர்கள் ஒன்றாக இணைந்து விளையாடுகிறார்கள் என்று தொடர்ந்து பல கருத்துகளை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நேற்றைய ஞாயிற்று கிழமை எபிசோடில் விஜய் சேதுபதி அனைத்தையும் பேசி முடித்துவிட்டு செல்லும் போது குருப்பிசம் என்பது ஆண்கள் அணியில் மட்டும் இல்லை. பெண்களிடையேயும் குரூப்பிசம் உள்ளது. அது பார்க்கும் எங்களுக்கும் தெரியும். அதனால் கூட்டாக சேர்ந்து விளையாடாமல் ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுடைய தணித் திறமையை தணியாக விளையாடி காட்ட வேண்டும் என்று கூறினார். அதனைக் கேட்ட பெண்கள் அதிர்ச்சியாக பதில் கூறாமல் நின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read… வசூலில் 125 கோடியை கடந்து சாதனைப் படைத்து வருகிறது சூரியின் மண்டாட்டி – கொண்டாட்டத்தில் படக்குழு