ஓடிடியில் சாதனைப் படைத்த விஸ்வநாத் & சன்ஸ் படம்… மகிழ்ச்சியில் படக்குழு – வைரலாகும் போஸ்ட்
Vishwanath And Sons Movie | தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் தற்போது ஓடிடியில் ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனைப் படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் இந்த ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து வரிசையாக படங்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் இந்த 2026-ம் ஆண்டில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் முதலாவதாக வெளியான கருப்பு படம் அவரது சினிமா வாழ்க்கையில் அதிக அளவில் வசூல் செய்த படமாக சாதனைப் படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவின் நடிப்பில் இரண்டாவதாக திரையரங்குகளில் வெளியான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகின்றது.
மேலும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்து இருந்த நிலையில் அவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமும் உலக அளவில் ரூபாய் 250 கோடிகளுக்கு அதிகமாக வசூலித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.




ஓடிடியில் சாதனைப் படைத்த விஸ்வநாத் & சன்ஸ் படம்:
இந்த நிலையில் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் உலக அளவில் அதிக அளவில் வரவேற்பைப் பெற்ற இந்திய மொழி படமாக உள்ளது என்று சாதனைப் படைத்துள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில் அதனை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
‘THE ONE’ IS STILL RULING. NOW GLOBALLY! 🔥🌍#VishwanathAndSons is TRENDING #1 Globally among Non-English Movies on @Netflix ❤️🔥
The love keeps getting BIGGER… 🫶🏻#VAS #BlockbusterVAS @Suriya_offl #VenkyAtluri @_mamithabaiju @realradikaa @TandonRaveena @gvprakash @vamsi84… pic.twitter.com/BTVBtGerV6
— Sithara Entertainments (@SitharaEnts) September 23, 2026