மூன்றாவது முறையாக தேசிய விருதை வென்ற ஜிவி பிரகாஷ் குமார் – வைரலாகும் பதிவு
GV Prakash Kumar | தென்னிந்திய மொழிகளில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார். இவர் மூன்றாவது முறையாக தேசிய விருது வென்றது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
குழந்தையாக இருக்கும் போதே தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகம் ஆனவர் ஜிவி பிரகாஷ் குமார் (Music Director GV Prakash Kumar). இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் அக்கா ஏ.ஆர்.ரிஹானாவின் மூத்த மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாகவே ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் குழந்தையாக இருக்கும் போதே பாடல் பாடியுள்ளார். இவர் கடந்த 2006-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான வெயில் என்ற படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். இவர் இசையமைப்பாளராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களுக்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அது மட்டும் இன்றி தற்போது தமிழ் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளிலும் தொடர்ந்து படங்களில் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் பிசியான இசையமைப்பாளராக வலம் வரும் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் இந்த 2026-ம் ஆண்டில் இதுவரை 10 படங்களுக்கு மேல் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அது ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.




3-வது முறையாக தேசிய விருதை வென்ற ஜிவி பிரகாஷ்:
இந்த நிலையில் இசையில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தொடர்ந்து மூன்றாவது முறையாக தேசிய விருதைப் பெற்றுள்ளார். அதன்படி முதலாவதாக சூரறைப் போற்று படத்திற்கு முதல் தேசிய விருதைப் பெற்ற ஜிவி பிரகாஷ் குமார் பெற்றார். அதனைத் தொடர்ந்து இரண்டாவதாக வாத்தி படத்திற்கு தேசிய விருதைப் பெற்ற ஜிவி பிரகாஷ் குமார் தற்போது மூன்றாவதாக அமரன் படத்திற்காக தேசிய விருதைப் பெற்றுள்ளார். இது குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் வெளியிட்ட பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… Dhanush: தனுஷின் ஓம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்.. எப்போது ரிலீஸ் தெரியுமா?
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#amaran my third blessing ❤️ thank u all #nationalfilmawards pic.twitter.com/Ni824Z4m8e
— G.V.Prakash Kumar (@gvprakash) September 22, 2026
Also Read… பிக் பாஸில் இந்தவார நாமினேஷன்.. கதறி அழுத்த ஆனந்தி – வைரலாகும் புரோமோ!