விஜய் சேதுபதியின் பத்தா படத்தின் கதை இதுதானா? வைரலாகும் தகவல்
Baththa movie synopsis | தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் பத்தா. இந்தப் படத்தின் கதை சுறுக்கம் என்ன என்பது குறித்து இணையத்தில் தகவல் வெளியாகி தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
பான் இந்திய மொழிகளில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி (Actor Vijay Sethupathi). இவர் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி இருந்தாலும் அடுத்தடுத்து தெலுங்கு மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக வரிசையாக காத்திருக்கின்றது. அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் காந்தி டாக்ஸ். இந்தப் படம் ஒரு மௌனப் படமாக உருவாகி கடந்த ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. படம் ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் பத்தா. இந்தப் படத்தை இயக்குநர் பாலாஜி தரணிதரன் எழுதி இயக்கி உள்ள நிலையில் இயக்குநர் அட்லி தயாரித்து உள்ளார். படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் படம் வருகின்ற அக்டோபர் மாதம் 1-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் சுறுக்கம் என்ன என்பது குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.




விஜய் சேதுபதியின் பத்தா படத்தின் கதை இதுதானா?
1986-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெறும் இத்திரைப்படம், பயந்த சுபாவம் கொண்ட எட்டு வயது சிறுவன் ஒருவனைப் பற்றியது. அவன் தற்செயலாக, அனைவராலும் அஞ்சப்படும் ஒரு ரவுடியை ஆள் அரவமற்ற பள்ளி கழிவறைக்குள் சிக்க வைக்கிறான். பசி, தனிமை மற்றும் தனது பலவீனமான நிலையை அந்த ரவுடி எதிர்கொள்ளும்போது, இருவருக்கும் இடையே எதிர்பாராத ஒரு பிணைப்பு உருவாகி, அது அவர்கள் இருவரின் வாழ்க்கையையும் என்றென்றைக்குமாக மாற்றியமைக்கிறது. இதுதான் இந்த படத்தின் கதை என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.
Also Read… Jailer 2: காந்தாவாக வித்யா பாலன்.. கதாபாத்திர அறிமுக வீடியோவை பகிர்ந்த ஜெயிலர் 2 படக்குழு!