AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பெண் குழந்தையை இப்படி வளர்க்கனும்… ஓடிடியில் வெளியாகி உள்ள இருமுடி படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

Irumudi Movie OTT Review Here | தெலுங்கு சினிமாவில் நடிகர் ரவி தேஜா நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் இருமுடி. இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ள நிலையில் படம் எப்படி இருக்கிறது என்று தற்போது பார்க்கலாம்.

பெண் குழந்தையை இப்படி வளர்க்கனும்… ஓடிடியில் வெளியாகி உள்ள இருமுடி படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
இருமுடிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 20 Sep 2026 19:13 PM IST

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் பெண் குழந்தைகளுக்கும் அப்பாவிற்கும் இடையே உள்ள பாசத்தை மையாமாக வைத்து பலப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அப்படி திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் தொடர்ந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றும் உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் தெலுங்கு சினிமாவில் அப்பா – மகள் பாசத்தை மட்டும் இல்லாமல் ஒரு தந்தை மகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை மையமாக வைத்து திரையரங்குகளில் வெளியான படம் இருமுடி. இந்தப் படம் கடந்த 21-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படத்தை தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக உள்ள இயக்குநர் சிவ நிர்வானா எழுதி இயக்கி உள்ளார். நடிகர் ரவி தேஜா நாயகனாக நடித்து உள்ள இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கர் நடித்து உள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சாய் குமார், குழந்தை நட்சத்திரா, அஜய் கோஷ், ஜபர்தஸ்த் கோமரம், ரமேஷ் இந்திரா, ஸ்வாசிகா, லக்ஷ்மன் மீசாலா, சுரபி பிரபாவதி, சாம், பிரனீதா தேவ், ஸ்ரீ லாஸ்யா, யாஷிகா, ராஜ்குமார் காசிரெட்டி, லோகேஷ் குமார் பரிமி, கிஷோர் குமார் பொலிமேரா, வினய் மகாதேவ், சாய் ஸ்வரூப், லக்ஷ்மி நாராயணா மற்றும் மனோஜ் ஆகியோர் இணைந்து நடித்து உள்ளனர். இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ள நிலையில் படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

ரவி தேஜாவின் இருமுடி படத்தின் கதை என்ன?

ரவி தேஜா மற்றும் பிரியா பவானி சங்கர் இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு பெண் குழந்தை பிறக்கிறது. பெண் குழந்தை பிறந்த பிறகு ஊரில் உள்ள அனைத்து பெண்களும் தனது குழந்தையைப் போல அவர்களுக்கு எந்த தீங்கு நடந்தாலும் எதிர்த்து நிற்கும் முரடனாக இருக்கிறார் ரவி தேஜா.

வருடத்திற்கு ஒருமுறை ஐயப்பன் கோவிலுக்கு மாலை போடும்போது மட்டும் குடிப்பழக்கம், சண்டை எதுவும் இல்லாமல் இருக்கிறார் ரவி தேஜா. அவரின் மகளோ அப்பாவிடம் எதையும் மறைக்காத அப்பா மீது மிகுந்த பாசம் உள்ள மகளாக இருக்கிறார். இப்படி இருக்கும் சூழலில் ரவி தேஜா மாலை அணிந்து இருந்த போது அவரது மகள் பெரிமனுசி ஆகிறார்.

Also Read… உருவகேலிக்கு பதிலடி.. பிக்பாஸ் நிகழ்ச்சியில் சட்டையை கழற்றி மேக்கப் அகற்றிய சல்மான்கான்..

அதனால் அப்பா – மகள் இருவரும் பார்த்துகொள்ளாமல் இருந்த போது அப்பாவிடம் ஒரு உண்மையை சொல்ல வேண்டும் என்று அவரது மகள் தவிக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் ரவி தேஜாவின் மகள் சடலமாக கிடைக்கிறது. அந்த கொலை செய்தது யார்? எப்படி அந்த குழந்தை உயிரிழந்தது என்பதை ரவி தேஜா கண்டுபிடிக்கிறார். இதுதான் படத்தின் கதை. இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… டாஸ்கில் மோதிக்கொண்ட ஷமா – ஜேசன்… இவ்வளவு கோபம் எதற்கு? கேள்வி எழுப்பிய விஜய் சேதுபதி

Follow Us