AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக்பாஸில் விஜய் சேதுபதியிடம் கம்ப்ளெயிண்ட் செய்த ஆனந்தி.. கலாய்த்து பேசிய லட்சுமி பிரியா – முனியம்மாள்.. வைரலாகும் புரோமோ!

Bigg Boss Tamil Season 10: மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தொடங்கி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இன்று 2வது வாரத்தின் இறுதியான நிலையில், ஹவுஸ்சமேட்ஸை விஜய் சேதுபதி சந்திப்பார். அதில் ஆனந்தி சொன்ன கம்ப்ளெயிண்ட் குறித்து மற்ற போட்டியாளர்களிடையே விசாரித்துள்ளார். அது தொடர்பான புரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

பிக்பாஸில் விஜய் சேதுபதியிடம் கம்ப்ளெயிண்ட் செய்த ஆனந்தி.. கலாய்த்து பேசிய லட்சுமி பிரியா – முனியம்மாள்..  வைரலாகும் புரோமோ!
பிக் பாஸ் சீசன் 10Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 19 Sep 2026 17:30 PM IST

பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss 10) நிகழ்ச்சியானது கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதியில் மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 19 போட்டியாளர்கள் கலந்துகொண்டிருந்த நிலையில், தற்போது மேலும் 2 வைல்ட் கார்ட்ட் எண்ட்ரியாக இணைந்துள்ளனர். மேலும் பிளாக் பாண்டி வெளியேறிய நிலையில், தற்போது 20 போட்டியாளர்கள் இந்த பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். இந்த நிகழ்ச்சியானது தொடங்கி கிட்டத்தட்ட 2 வாரங்கள் (13 நாட்கள்) ஆனா நிலையில், இந்நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே பெரும் சண்டையுடனே இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் 2வது வைல்ட் கார்ட் என்ட்ரியாக நடிகை ஆனந்தி நுழைந்திருந்தார். இவர் இந்த நிகழ்ச்சியில் நுழைந்த முதல் நாளிலே மற்ற போட்டியாளர்களிடம் வம்பிழுத்திருந்தார்.

மேலும் தனது வரவை யாரும் சரியாக கொண்டாடவில்லை, மேலும் என்னை யாரையும் மதிக்கவில்லை என ஆவர் விஜய் சேதுபதியிடம் கம்ப்ளெயிண்ட் செய்துள்ளார். அதை இன்று வார இறுதியில் விசாரிய விஜய் சேதுபதி மாற்றும் அந்த விசாரணைக்கு மற்றப் போட்டியாளர்கள் கொடுத்த விளக்கம் தொடர்பான புரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ராக்கா படத்தின் மூலம் இந்திய சினிமாவை உலகளவில் கொண்டு சேர்க்கப்போகிறார்.. அட்லீ குறித்து சிபி சக்கரசவர்த்தி பேச்சு!

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 13வது நாளின் 2வது புரோமோ:

இந்த ப்ரோமோவில், விஜய் சேதுபதியிடம் ஆனந்தி, முதல் நாளில் என்னை ஒழுங்காக யாரையுமே வரவேற்கவில்லை என அதில் அவர் கூறியிருந்தார். அதைவிசாரித்த விஜய் சேதுபதியிடம் லட்சுமி பிரியா மற்றும் முனியம்மாள் இருவரும் விளக்கமளித்திருந்தனர். முனியம்மாள் அதில், சார், ஆனந்தி காலையில் பாட்டு போடும்போது உள்ளே வந்தாக. அப்போது எல்லாரும் நன்றாக அனடனமாடிக்கொண்டுதான் இருந்தாங்க. அதன் பிறகு எல்லாருமே பாத் ரூமை நோக்கி போய்ட்டாங்க என கூறினார்.

இதையும் படிங்க: ஜேசன் மற்றும் சிக்மா படம் குறித்து பாராட்டி பேசிய நடிகர் சூரி

மேலும் பேசிய லட்சுமி பிரியா, “அவங்க வேறு எதுவோ எதிர்பார்த்து உள்ளே வந்திருக்காங்கனு நினைக்கிறேன் , ஆனால் அது இங்க நடக்கல சார்” என அதில் பேசியிருந்தார். உடனே பேசிய ஆனந்தி, “எனக்கு போட்டியாளர் யார் என தெரிஞ்சிக்கிட்டேன் சார்” என அதில் அவர் தெரிவித்திருந்தார். இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது, ஒவ்வொரு போட்டியாளர்களும் மற்ற போட்டியாளர்களிடையே பகையையே ஏற்படுத்திவருகிறார்கள். அவ்வாறாக இந்த நிகழ்ச்சி இருப்பதாக வெளிப்படையாக தெரிகிறது.

Follow Us