AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக்பாஸிலிருந்து போட்டியாளர்களால் எவிக் செய்யப்பட்டது யார்?

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி தொடர்ந்து இரண்டாவது வாரத்தின் முடிவை எட்டியுள்ளது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் இந்த இரண்டாவது வாரம் போட்டியாளர்களால் தேர்வு செய்யப்பட்டு ஒரு நபர் வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸிலிருந்து போட்டியாளர்களால் எவிக் செய்யப்பட்டது யார்?
பிக்பாஸ் தமிழ் சீசன் 10
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 19 Sep 2026 10:13 AM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி கடந்த 2026-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 06-ம் தேதி முதல் தொடங்கப்பட்டு தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிலையில் முன்பு எப்போதும் இல்லாத பல புது விசயங்களை இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் புகுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு எடுத்துகாட்டு முந்தைய சீசன்களில் இல்லாத ஒன்றுதான் இந்த காமென் மேன் நிகழ்ச்சி. அந்த போட்டியில் கலந்துகொண்டு வெற்றிப் பெற்ற போட்டியாளர்கள் தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷனுக்கு தேர்வு செய்யப்பட்டு மக்களிடம் ஓட்டிங் ஒரு பக்கம் நடைப்பெற்றாலும் மற்றொரு பக்கம் வீட்டில் உள்ள போட்டியாளர்களால் தேர்வு செய்யப்படும் ஒரு போட்டியாளர் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுகிறார்.

அப்படி கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து போட்டியாளர் சாவன்யா வேலு சக போட்டியாளர்களால் தேர்வு செய்யப்பட்டு வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் இந்த வாரம் கதை சொல்லட்டுமா டாஸ்க் நடைப்பெற்றது. இதில் தலைவரால் மூன்று நபர்கள் சரியாக கதை சொல்லாதவர்கள் என்று தேர்வு செய்யப்பட்டவர்களில் இருந்து ஒருவரை மற்ற போட்டியாளர்கள் தேர்வு செய்ய வேண்டும்.

இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேரிய போட்டியாளர் யார்?

அப்படி இந்த இரண்டாவது வாரத்தில் கதை சொல்லட்டுமா டாஸ்கில் இருந்து வீட்டின் லீடரால் தேர்வு செய்யப்பட்ட அஸ்மிதா, ஷமா மற்றும் ஜாவித் ஆகிய மூன்று நபர்களில் இருந்து ஜாவித் தேர்வு செய்யப்பட்டு வெளியே அனுப்பப்பட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் இந்த வாரம் மக்களால் வாக்குகளை குறைவாக பெற்ற போட்டியாளரும் வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Also Read… இதுதான் ஜன நாயகமா? பிக்பாஸில் லீடரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் போட்டியாளர்கள் – வைரலாகும் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… தம்பி சூரி மிகப்பெரிய சம்பவம் செய்திருக்கிறாய் – சமுத்திரகனி பாராட்டு

Follow Us