AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தனுஷின் 56-வது படத்தின் டைட்டில் இதுவா? இணையத்தில் வைரலாகும் தகவல்

Dhanush 56th movie update | நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படத்தினை இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து எழுதி இயக்க உள்ளார். இந்தப் படத்தின் டைட்டில் என்ன என்பது குறித்து தகவல் இணையத்தில் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.

தனுஷின் 56-வது படத்தின் டைட்டில் இதுவா? இணையத்தில் வைரலாகும் தகவல்
தனுஷ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 15 Sep 2026 18:04 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நட்டிப்பில் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தொடர்ந்து பான் இந்திய மொழிகளிலும் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. அது மட்டும் இன்றி அவ்வபோது ஹாலிவுட் படங்களிலும் நடிகர் தனுஷ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் தனுஷ் சினிமாவில் இயக்குநராவும், தயாரிப்பாளராகவும், பாடகர், பாடலாசிரியர் என மற்றப் பணிகளையும் செய்து வருகிறார். இவர் நடிப்பில் இறுதியாக தமிழ் சினிமாவில் கர என்ற படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் ஹீஸ்ட் த்ரில்லர் பாணியில் உருவாகி இருந்த நிலையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது ஓம் என்ற படத்தில் நடிகர் தனுஷ் நடித்து வருகிறார்.

தொடர்ந்து இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படத்தினை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி உள்ள நிலையில் படத்தில் தனுஷ் உடன் இணைந்து பல முன்னணி நடிகர்களும் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். மேலும் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் படம் வருகின்ற அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தனுஷின் 56-வது படத்தின் டைட்டில் இதுவா?

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் தனது 56-வது படத்திற்காக இயக்குநர் தமிழரசன் பச்சை முத்துவுடன் கூட்டணி அமைக்கின்றார். இந்த நிலையில் சமீபத்தில் வெளியான தகவலின்படி தனுஷ் 56 படத்திற்குத் தற்காலிகமாக படையல் என்று பெயரிடப்பட்டுள்ளது. புஷ்பா படத்தைப் போலவே இதுவும் மிகுந்த வன்முறை நிறைந்த ஒரு திரைப்படமாக அமையவுள்ளது. இப்படத்திற்கு ‘A’ சான்றிதழ் கிடைக்கக்கூடும். படப்பிடிப்புக்குச் செல்லும் முன்பே இயக்குநரும் தனுஷும் இதைத் திட்டமிட்டுள்ளனர். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், தனுஷே இப்படத்தைத் தயாரிக்கவும் வாய்ப்புள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.

Also Read… சியான் விக்ரமின் 63-வது படத்தின் பெயர் என்ன தெரியுமா? வெளியானது அப்டேட்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… அவருடைய வார்த்தைகள் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம்… மண்டாட்டி படத்தினை பாராட்டிய ரஜினிகாந்த் – நெகிழ்ச்சியில் சூரி

Follow Us