சியான் விக்ரமின் 63-வது படத்தின் பெயர் என்ன தெரியுமா? வெளியானது அப்டேட்
Chiyaan 63 Movie Title Announcement Promo | நடிகர் சியான் விக்ரம் தற்போது தனது 63-வது படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இன்று அவரது 63-வது படத்தின் டைட்டில் வீடியோவைப் படக்குழு தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் நடிகர் விக்ரமை பொருத்தவரை அவரது ரசிகர்கள் அவரின் படங்களை கொண்டாடுவது மட்டும் இன்றி மற்ற நடிகர்களின் ரசிகர்களும் அவரின் படங்களை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் விக்ரமிற்கு தமிழ் சினிமாவில் எந்த அளவிற்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளதோ அதே அளவிற்கு மலையள சினிமா ரசிகர்களும் அவரையும் அவரது படங்களையும் கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல முன்னணி இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்த நடிகர் விக்ரம் இளம் இயக்குநர்களுடனும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். அந்த வகையில் இறுதியாக இயக்குநர் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து இருந்தார்.
அதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் விக்ரம் அவரது 63-வது படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். அதன்படி நடிகர் விக்ரம் நடிக்கும் இந்த 63-வது படத்தை இயக்குநர் ஆனந்த் சங்கர் எழுதி இயக்கி வருகிறார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் சியான் விக்ரம் உடன் இணைந்து ரியா ஷிபு, ஊர்வசி எம்.எஸ். பாஸ்கர், ஷம்மி திலகன், சம்யுக்தா ஹெக்டே, விடிவி கணேஷ் என பலர் இந்தப் படத்தில் நடித்து உள்ளனர்.




சியான் விக்ரமின் 63-வது படத்தின் பெயர் என்ன தெரியுமா?
மேலும் இந்தப் படத்தினை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர்கள் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்து உள்ளனர். மேலும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் டைட்டில் டீசரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி சியான் 63 படத்திற்கு பவர் ஹவுஸ் என்று பெயர் வைத்துள்ளனர். மேலும் இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… டேர் டெவில் படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போகிறதா? வைரலாகும் தகவல்
பவர் ஹவுஸ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
CHIYAAN in the HOUSE,
for POWER HOUSE ❤️🔥#PowerHouse Title Announcement Promo ▶️ https://t.co/GlEKyhzm2AA film by Anand Shankar, on the big screens – 2027.@SathyaJyothi @chiyaan @anandshank @Music_Santhosh @riyashibu_ @RDRajasekar @arjun1on @saisiddharth_ @shankaruppusamy… pic.twitter.com/kJIIdLayR3
— Sathya Jyothi Films (@SathyaJyothi) September 14, 2026
Also Read… பிக்பாஸில் வைல்கார்ட் போட்டியாளராக நுழைந்த நடிகை ஆனந்தி – போட்டியளர்களிடையே சலசலப்பு