Cibi Chakaravarth: ராக்கா படத்தின் மூலம் இந்திய சினிமாவை உலகளவில் கொண்டு சேர்க்கப்போகிறார்.. அட்லீ குறித்து சிபி சக்கரசவர்த்தி பேச்சு!
Cibi Chakaravarthi About Atlees Raaka Movie: தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் சிபி சக்கரவர்த்தி. டான் படத்தின் மூலம் இயக்குநராக நுழைந்த இவர், மக்கள் மத்தியில் பிரபலமானவராக இருக்கிறார். சமீபத்தில் பத்தா பட புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சிபி சக்கரவர்த்தி, அட்லீ மற்றும் ராக்கா திரைப்படம் குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் அட்லீ குமார் (Atlee Kumar). இவரின் இயக்கத்தில் தமிழில் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் ஆர்யா (arya) வரை பல்வேறு பிரபலன்களும் படங்களில் பணியாற்றியுள்ளனர். மேலும் இந்தியில் இவர் நடிகர் ஷாருக்கானின் நடிப்பில் ஜவான் (Jawan) என்ற திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றியை பெற்றிருந்தார். இதன் மூலமாக பான் இந்திய இயக்குநராக இவர் அறியப்பட்டிருந்தார். அந்த வகையில் மெர்சல், பிகில் போன்ற திரைப்படங்களில் அட்லீ குமாருடன் உதவி இயக்குநராக பணியாற்றியவர்தான் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி (Cibi Chakaravarthi). இவர் சிவகார்த்திகேயனின் டான் (Don) படத்தை இயக்கியதன் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். இந்த படமானது இவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுக்க, இதன் பிறகும் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் (Sivakarthikeyan) புதிய படத்தில் இணைகிறாராம்.
மேலும் இதற்கு முன் ரஜினியுடன் தலைவர் 173 படத்தில் இணைவதாக இருந்த நிலையில், அந்த படம் கைவிடப்பட்டது. மேலும் சமீபத்தில் நடந்த விஜய் சேதுபதியின் பத்தா பட இசைவெளியீட்டு விழாவில் பேசிய சிபி சக்கரவர்த்தி, அட்லீ குமார் மற்றும் அவரின் இயக்கத்தில் உருவாகிவரும் ராக்கா படம் பற்றி பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: இது பொல்லாத உலகம்டா தம்பி… ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும் டோரோத்தி பட ட்ரெய்லர்!
அட்லீயின் ராக்கா திரைப்படம் குறித்து பகிர்ந்த இயக்குநர் சிபி சக்கரவர்த்தி:
பத்தா பட இசைவெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் சிபி சக்கரவர்த்தி, அதில் “அட்லீ சார், இந்திய சினிமாவைப் பெருமைப்படுத்தும் விதத்தில், ரக்கா பட காட்சிகள் உருவாகி வருகிறார். இது போன்ற காட்சிகளை நானும் இதற்கு முன் பார்த்ததில்லை, சார். இன்னும் 3 நாட்களில், நீங்கள் அனைவரும் அதைக் காணப் போகிறீர்கள்.
இதையும் படிங்க: இயக்குநர் அட்லி எனக்கு ஒரு சிறந்த வழிகாட்டி – இயக்குநர் சிபி சக்ரவர்த்தி
இதை சொல்லலாமா? அல்லது வேண்டாமா? என தெரியவில்லை, எஸ்.எஸ்.ராஜமௌலி சார் இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதைப் போலவே, அட்லீ சார், ராக்கா மூலம் இந்திய சினிமாவை உலக வரைபடத்தில் இடம்பெறச் செய்யப் போகிறார். உங்கள் மாணவனாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன், சார்” என அதில் தெரிவித்துள்ளார்.
ராக்கா திரைப்படம் குறித்து இயக்குநர் சிபி சக்கரவர்த்தி பேசியதாக வைரலாகும் வீடியோ பதிவு:
Sir, the visuals are shaping up in a way that will make Indian cinema proud. Even I haven’t seen visuals like this before, sir. In just 3 days, you all are going to witness it.
Just like how #SSRajamouli sir is taking Indian cinema to the next level, Atlee…
— Movie Tamil (@_MovieTamil) September 19, 2026
இயக்குநர் அட்லீ தயாரிப்பிலும் இயக்குநர் பாலாஜி தரணீதரனின் இயக்கத்திலும் உருவாகியுள்ள புதிய படம்தான் பத்தா. இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஜோஸ் லிஜோமோல் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 01ம் தேதியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.