AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சிக்மா பட ட்ரெய்லரைப் பார்த்து பாராட்டிய இயக்குநர் ராஜமௌலி – வைரலாகும் வீடியோ

Rajamouli praised the Sigma movie trailer | தமிழ் சினிமாவில் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகம் ஆகும் படம் சிக்மா. இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்து இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி பாராட்டி உள்ள வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

சிக்மா பட ட்ரெய்லரைப் பார்த்து பாராட்டிய இயக்குநர் ராஜமௌலி – வைரலாகும் வீடியோ
ஜேசன் சஞ்சய் மற்றும் ராஜமௌலிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 19 Sep 2026 11:35 AM IST

தமிழ் சினிமாவில் மூன்றாவது தலைமுறையாக வருகை தந்துள்ளார் ஜேசன் சஞ்சய். இவர் தளபதி விஜயின் மகனாக தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானார். அதன்படி முன்னதாக தனது தந்தை விஜய் உடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். இதனைத் தொடர்ந்து ஜேசன் பெரியவராக ஆன பிறகு நாயகனாக நடிப்பார் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அவர் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக இயக்குநராக அறிமுகம் ஆவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழ் சினிமாவில் தற்போது உருவாகி உள்ள படம் சிக்மா. இந்தப் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இயக்குநராக அறிமுகம் ஆகிறார் ஜேசன் சஞ்சய். இந்தப் படம் வருகின்ற அக்டோபர் மாதம் 02-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்து உள்ள நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது. மேலும் இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்து இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி பாராட்டிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சிக்மா பட ட்ரெய்லரைப் பார்த்து பாராட்டிய இயக்குநர் ராஜமௌலி:

அதன்படி இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி பேசியதாவது, இந்த டிரெய்லரைப் பார்க்கும்போது எனக்குத் தோன்றும் முதல் விஷயம் என்னவென்றால், இது மிகுந்த வேடிக்கை, சாகசம் மற்றும் Gen Z பாணியிலான அதிரடி காட்சிகள் நிறைந்த ஒரு சுவாரஸ்யமான பயணமாக இருக்கப்போகிறது என்பதுதான். அத்துடன், ஒரு நல்ல உணர்வுப்பூர்வமான நிறைவையும் இது கொண்டிருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். இது மிகவும் அருமையாகத் தோன்றுகிறது என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… துல்கர் சல்மானின் ஆகாசம்லோ ஓக தாரா படத்தின் ரிலீஸ் எப்போது? வெளியானது அப்டேட்

ஜேசன் சஞ்சய் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… நாளை ஓடிடியில் வெளியாகும் மொத ராத்திரி படம் – வைரலாகும் அப்டேட்

Follow Us