The Paradise: ரத்த கரையில்… நானியின் தி பாரடைஸ் படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்? – சென்சார் அப்டேட் இதோ!
The Paradise Movie: தெலுங்கு சினிமாவில் இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டுவந்த திரைப்படங்களில் ஒன்றுதான் தி பாரடைஸ். இந்த படத்தின் ரிலீஸ் கிட்ட நெருங்கிய நிலையில், தற்போது இப்படக்குழு சென்சார் அப்டேட் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை யாரெல்லாம் பார்க்கலாம் என காணலாம்.
டோலிவுட் சினிமாவின் பிரபல இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலாவின் (Srikanth Odela) இயக்கத்தில் உருவாகியுள்ள அதிரடி ஆக்ஷன் திரைப்படம்தான் தி பாரடைஸ் (The Paradise). இந்த படத்தில் நடிகர் நானி (Nani) ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர் (Kayadu Lohar) நடித்துள்ளார். இப்படமானது கடந்த 2025ம் ஆண்டு தொடக்கத்திலே ஷூட்டிங் ஆரம்பமான நிலையில், கடந்த 2026ம் ஆண்டு ஜூன் மாதத்தின் இறுதியில் நிறைவடைந்தது. இந்த படத்தில் நடிகர் நானி அதிரடி ஆக்ஷன் நாயகனாக மற்றும் கிராமத்தை காக்கும் ஒரு கேங்ஸ்டராக நடித்துள்ளார். இப்படமானது பக்கா தெலுங்கு படமாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இசையமைப்பாளர் அனிருத் (Anirudh) இசையமைத்துள்ளார்.
இவரின் இசையில் இதுவரை மொத்தம் 2 பாடல்கள் வெளியாகியுள்ளது. அந்த விதத்தில் வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதியில் இப்படம் உலகமெங்கும் வெளியாகிறது. அதை முன்னிட்டு தற்போது இப்படத்தின் சென்சார் அப்டேட் வெளியாகியுள்ளது.




நானியின் தி பாரடைஸ் படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்:
இப்படமானது அதிரடியான ஆக்ஷன் படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் நானியின் கதாபாத்திரம் மிகவும் பிரம்மாண்டமாக இருக்குமாம். இப்படத்தில் நானி ஜடல் என்ற வேடத்திலும் அவருக்கு ஜோடியாக கயாடு லோஹர் சுப்பு என்ற வேடத்திலும் நடித்துள்ளாராம்.
இதையும் படிங்க: மண்டாடி வகையரா.. சூரியின் முதல் ரூ 100 கோடி வசூல்.. வெற்றி மிதப்பில் மண்டாடி படக்குழு!
இப்படத்தில் அதிகமாக ஆக்ஷன், ரத்தக்கறை மற்றும் வன்முறை நிறைந்த காட்சிகளாக இருக்கும் நிலையில், இதற்க்கு “ஏ” தரச் சென்சார் சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாம். அதன்படி இப்படத்தை 18வது வயதிற்கு மேற்பட்டோர் மட்டுமே திரையரங்குகளில் சென்று பார்க்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தி பாரடைஸ் திரைப்படத்திற்கு சென்சார் குழு கொடுத்த சென்சார் சான்றிதழ் தொடர்பான எக்ஸ் பதிவு:
‘A’ highly Intense Emotional film at your nearest cinemas from 24☆09☆2026.#TheParadise pic.twitter.com/UJ70j2ZZ1V
— Srikanth Odela (@odela_srikanth) September 21, 2026
தி பாரடைஸ் படமானது 2026ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக தயாராகியுள்ளது. இந்த படமானது இன்னும் சில நாட்களில் வெளியாகும் நிலையில், இதன் டிக்கெட் புக்கிங் இன்று (21/09/2026) தொடங்குகிறது. மேலும் இதுவரை இப்படத்திலிருந்து ட்ரெய்லர் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதையும் படிங்க: அதனால் இப்படத்திற்கு ட்ரெய்லர் வெளியாகாது என பலரும் கூறிவருகிறார்கள். இதுகுறித்து படக்குழு இன்னும் எந்த அப்டேட்டையும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.