AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சிவகார்த்திகேயனின் நியூ லுக் இணையத்தில் வைரலாகி வருகின்றது

Actor Sivakarthikeyan New Look | நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது சேயோன் படத்தில் பிசியாக நடித்து வருகின்றார். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் நடிக்க தொடர்ந்து ஒப்பந்தம் ஆகி வருகிறார். இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய தோற்றம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சிவகார்த்திகேயனின் நியூ லுக் இணையத்தில் வைரலாகி வருகின்றது
சிவகார்த்திகேயன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 21 Sep 2026 14:30 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இதுவரை 25 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதன்படி அவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் பராசக்தி. இந்தப் படத்தை இயக்குநர் சுதா கொங்கரா எழுதி இயக்கி இருந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் படம் திரையரங்குகளில் வெளியானது. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்தப் படத்தை தொடர்ந்து தனது 26-வது படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் சிவக்குமார் முருகேசன் உடன் இணைந்துள்ளார்.

இந்தப் படத்திற்கு சேயோன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படமும் ஸ்பிரிச்சுவல் பாணியில் உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தை நடிகர் கமல் ஹாசன் தயாரித்து வரும் நிலையில் படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

சிவகார்த்திகேயனின் நியூ லுக் இணையத்தில் வைரலாகி வருகின்றது:

அதன்படி சேயோன் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து உருவாக உள்ள படங்கள் தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் திருமண விழாவில் கலந்துகொண்டுள்ளார். அந்த வீடியோவில் நடிகர் சிவகார்த்திகேயன் தலைமுடிக்கு கலர் அடித்து வித்யாசமான தோற்றத்தில் இருக்கிறார். அது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… என்றாவது ஒரு நாள் உங்களை இயக்க விரும்புகிறேன் – அஸ்வத் மாரிமுத்து சொன்னது யார் தெரியுமா?

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… பிக் பாஸில் இந்த வாரத்தில் வெளியேறும் நபர் யார்? வெளியான புரோமோ!

Follow Us