AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பெருமையாக இருக்கிறது மாப்ள… அசோக் செல்வனை பாராட்டிய சூர்யா

Anbil Avan The Jump Stunt | தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வரும் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் அன்பில் அவன். இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு அவரை பாராட்டி உள்ளார் நடிகர் சூர்யா.

பெருமையாக இருக்கிறது மாப்ள… அசோக் செல்வனை பாராட்டிய சூர்யா
சூர்யா - அசோக் செல்வன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 20 Sep 2026 11:10 AM IST

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தன் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார் நடிகர் அசோக் செல்வன். அதனைத் தொடர்ந்து சிரிய பட்ஜெட் படங்களில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து நடிகர் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கத் தொடங்கியதில் இருந்து அவரது நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் அசோக் செல்வன் தேர்வு செய்யும் கதைகளும் சிறப்பாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் பாராட்டுவதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் அன்பில் அவன். இந்தப் படம் வருகின்ற 25-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மேலும் இந்தப் படத்தை இயக்குநர் ஆர் கார்த்திகேயன் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடிகை பிரீத்தி முகுந்தன் நடித்து உள்ள நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சாபுமோன் அப்துசமத், கதிர்பாலு, மகா டெல்லி கணேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது.

பெருமையாக இருக்கிறது மாப்ள… அசோக் செல்வனை பாராட்டிய சூர்யா:

இந்த நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட நடிகர் சூர்யா, நடிகர் அசோக் செல்வனை பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது, மாப்லா அசோக் செல்வன், நீங்கள் உங்களை எவ்வளவு தூரம் உந்தித் தள்ளுகிறீர்கள் என்பதைப் பார்க்கும்போது பெருமிதம் கொள்கிறது. நீங்கள் முழுமையாகத் தகுதியான வெற்றியை அடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த வெளியீடு சிறப்பாக அமைய அனைத்து நல்வாழ்த்துக்களும் அன்பில் அவன் குழுவினருக்கு என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… சிக்மா பட ட்ரெய்லரைப் பார்த்து பாராட்டிய இயக்குநர் ராஜமௌலி – வைரலாகும் வீடியோ

நடிகர் சூர்யா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… STR 51 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்? இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து ஓபன் டாக்

Follow Us