AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக்காசோ படம் தனுஷின் அந்த படத்தின் வெற்றியில் பாதியாவது இருக்க வேண்டும் – அபிஷன் ஜீவிந்த்

Abishan Jeevinth talks about Picaso movie | தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிறார் அபிஷன் ஜீவிந்த். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் பிக்காசோ. இந்தப் படம் எப்படிப்பட்ட படமாக இருக்கும் என்று அபிஷன் ஜீவிந்த் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிக்காசோ படம் தனுஷின் அந்த படத்தின் வெற்றியில் பாதியாவது இருக்க வேண்டும் – அபிஷன் ஜீவிந்த்
பிக்காசோImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 21 Sep 2026 17:38 PM IST

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாக வலம் வருபவர் நடிகர் அபிஷன் ஜீவிந்த். இவர் கடந்த 2025-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். இவர் இயக்குநராக அறிமுகம் ஆன இந்த டூரிஸ்ட் ஃபேமிலி படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படம் பல விருதுகளையும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தமிழ் சினிமாவில் வித் லவ் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். இந்தப் படம் கடந்த பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது.

இவர் இயக்குநராக அறிமுகம் ஆன படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது போல நாயகனாக அறிமுகமான வித் லவ் படமும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது அபிஷன் ஜீவிந்த் அடுத்ததாக நடித்து வரும் படம் பிக்காசோ. இந்தப் படத்தில் இவருடன் இணைந்து நடிகர்கள் சிவராஜ்குமார், ஷிவானி நகரம், யோகலட்சுமி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

பிக்காசோ தனுஷின் அந்த படத்தின் வெற்றியில் பாதியாவது இருக்கும்:

இந்த நிலையில் சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துகொண்ட அபிஷன் ஜீவிந்த் பிக்காசோ படம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி அவர் பேசியதாவது, எங்கள் சமீபத்திய திரைப்படமான ‘பிக்காசோ தனுஷின் யாரடி நீ மோகினி படத்தின் வெற்றியில் 50 சதவீதத்தையாவது எட்ட வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாக உள்ளது. அதுவே இப்படத்தைப் பெரும் வெற்றிப் படமாக (blockbuster) மாற்றிவிடும். படப்பிடிப்பு முடிந்த பிறகு அதன் வெளியீட்டு வடிவத்தைப் பார்த்தேன். அடுத்த ஆண்டில் வெளிவரவிருக்கும் மிகச்சிறந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். இது அனைவருக்கும் ஒரு சிறப்பான திரைப்படமாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.

Also Read… பரோட்டா சூரி என்பது இல்லவே இல்ல.. என் பேரு சூரி மட்டும்தான் – விளக்கமளித்த சூரி!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி 3-வது வாரம் மோதலுடன் தொடங்கியுள்ளது – வைரலாகும் புரோமோ வீடியோ

Follow Us