பிக்பாஸில் பணப்பெட்டியை எடுக்க இதுதான் காரணம்… உடைந்து அழுத குமரன் – கண்ணீரில் மூழ்கிய ஹவுஸ்மெட்ஸ்!
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இன்று பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு நடிகர் குமரன் வெளியேறி உள்ளார். அதற்கு காரணம் என்ன என்பது குறித்து அழுதுகொண்டே அவர் பேசியது இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
தமிழ் சின்னத்திரையில் கடந்த 06-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு தொடங்கியது பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி தொடங்கிய போது மொத்தம் 19 போட்டியாளர்கள் உள்ளே அனுப்பட்டனர். அதில் முதல் வாரத்திலேயே நடிகர் ப்ளாக் பாண்டி உடல்நலக் குறைவு காரணமாக வெளியேறினார். அதனைத் தொடர்ந்து இரண்டு வைல்கார்ட் போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டனர். அவர்கள் இருவரும் எவிக்ஷனில் வெளியேறிய நிலையில் தற்போது மொத்தம் 18 போட்டியாளர்கள் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் உள்ளனர். கடந்த வார இறுதியில் லீடர் எக்ஸிட் மூலம் வெளியேறிய மூன்று போட்டியாளர்கள் உள்ளே வந்த நிலையில் வீட்டில் இருக்கும் மூன்று தகுதியற்ற போட்டியாளர்கள் என மூவரை தேர்வு செய்து அவர்களுடன் ரோப் டாஸ்க் விளையாடுகின்றனர்.
இதில் லக்ஷ்மி பிரியா நடிகர் குமரனை தேர்வு செய்துள்ளார். இவர்கள் இருவரும் 5 அடி நீளம் உள்ள கயிரை கட்டிக்கொண்டே இந்த வாரம் முழுவதும் ஒன்றாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் அந்த 6 நபர்களில் மூன்று பேர் மட்டுமே வீட்டில் இருக்க முடியும் என்றும் மூன்று பேர் நிச்சயமாக போட்டியை விட்டு வெளியேறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




பணப்பெட்டியை எடுக்க இதுதான் காரணம்… உடைந்து அழுத குமரன்:
இந்த நிலையில் இன்றைய எபிசோடுகான புரோமோக்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. அதில் இந்த 6 போட்டியாளர்களுக்கு என்று பணப்பெட்டி டாஸ்க் நடைபெறுகிறது. 5 லட்சம் மதிப்புள்ள அந்த பெட்டியை எடுத்துக்கொண்டு யார் வெளியேற விருப்பம் தெரிவிக்கிறீர்கள் என்று பிக்பாஸ் கேட்க சற்றும் யோசிக்காத குமரன் அதனை ஏற்று வெளியேறுவதாக தெரிவித்தார். இது வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
இந்த நிலையில் தற்போது வெளியான மூன்றாவது புரோமோவில் அதற்கான காரணத்தை குமரன் தெரிவித்துள்ளார். அதன்படி அவரது தந்தை உடல்நலக் குறைவால் உள்ளார். அவரை விட்டு இருக்க முடியவில்லை என்றும் தான் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் நேரத்தில் அவருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டால் அதனை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்காக வாழ்நாள் முழுவதும் நான் வருத்தப்படுவேன். அதனால் இந்த வீட்டைவிட்டு வெளியேறுகிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… மீண்டும் தொடங்கியது ப்ரோ க்ளப் படத்தின் ஷூட்டிங்… வைரலாகும் தகவல்
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day24 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #BiggBossTheTurningPoint #BBTurningPoint #TheTurningPoint #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #VijayTV… pic.twitter.com/dULcT9LR8b
— Vijay Television (@vijaytelevision) September 30, 2026
Also Read… விஜய் நடித்த ‘லியோ’ கஃபே.. ஜம்மு காஷ்மீரில் இப்போ இதுதான் டிரெண்டிங்.. குவிந்து வரும் ரசிகர்கள்!