AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

BB Tamil 10: என்னப்பா இது..? ஒருவருக்கொருவராக மோதிக்கொள்ளும் அஸ்மிதா – சாவன்யா வேலு!

Bigg Boss Ashmita and Savanya Velu Fight: தமிழ் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பார்க்கும் ஆர்வத்தை தூண்டிவருகிறது. இந்த நிகழ்ச்சியானது தொடங்கி 4வது வாரத்தில் பல சண்டைகளுடன் நடைபெற்றுவருகிறது. அந்த விதத்தில் ரோப் டாஸ்கில் சாவன்யா வேலு மற்றும் அஸ்மிதா இருவரும் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் புரோமோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.

BB Tamil 10: என்னப்பா இது..? ஒருவருக்கொருவராக மோதிக்கொள்ளும் அஸ்மிதா – சாவன்யா வேலு!
அஸ்மிதா - சாவன்யா வேலுImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 29 Sep 2026 14:04 PM IST

விஜய் டிவியில் மக்கள் மத்தியில் அதிகம் வரவேற்க்கப்படும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்துவருவதுதான் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10). இந்த நிகழ்ச்சியானது கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 06ம் தேதி முதல் தொடங்கியிருந்தது. இந்த நிகழ்ச்சியானது ஆரம்பமாகி கிட்டத்தட்ட 23 நாட்களான நிலையில், இப்போதிருந்தே இந்த நிகழ்ச்சியானது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுப்பாளராக தொகுத்துவரும் நிலையில், மக்கள் மத்தியில் வரவேற்கப்படுகிறது. பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள், லீடர் எக்ஸிட் மூலமாக மொத்தம் 3 பேர் வெளியேற்றப்பட்டிருந்தனர். தற்போது அந்த மூவரும் மீண்டும் உள்ளே நுழைந்துள்ள நிலையில், தனக்கு இணையான மற்றும் வீட்டில் இருக்க தகுதி இல்லாத 3 போட்டியாளர்களை வெளியேற்றவேண்டும். அல்லது அவர்கள் வெளியேறவேண்டும் என புது ரோப் டாஸ்க் நடந்துவருகிறது.

அந்த விதத்தில் ஏற்கனவே இந்த டாஸ்க் தொடங்கியதிலிருந்து அஸ்மிதா மற்றும் சாவன்யா வேலு இருவருக்குமே பகை யோருந்துவரும் நிலையில், இன்று (29/09/20260 வெளியான 2வது புரோமோவில் இவர்கள் இருவரும் மோதிக்கொள்ளும் காட்சிகள் வெளியாகியுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: 4 நாட்களில் ஹிப்ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு 2 படத்தின் வசூல் இவ்வளவா? அதிகாரபூர்வமாக வெளியான அப்டேட்!

ரோப் டாஸ்கில் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் அஸ்மிதா மற்றும் சாவன்யா வேலு:

இந்த இருவரும் ஒரே கயிற்றினால் கைகள் கட்டப்பட்டிருக்கும் நிலையில், தான் குளிக்கவேண்டும் என அஸ்மிதா, சாவன்யா வேலுவை கயிற்றினால் இழுத்துக்கொண்டு செல்கிறார். இந்நிலையில் குளிக்கும் அறையில் இவர்கள் இருவருக்குள்ளும் வாய் தகராறு நடந்துள்ளது. இதில் சாவன்யா வேலு அஸ்மிதாவை தனது வார்த்தைகளால் கோபமாக பேசியிருந்தார். மேலும் இந்த இருவருமே டைனிங்க் ஏரியாவில் இருந்த நிலையில், அந்த இடத்திலும் வாக்குவாதம் முற்றியது.

இதையும் படிங்க: வெளியேற்ற இதெல்லாமே பண்ணுவாங்க.. வார்த்தைகளால் குமாரனை காயப்படுத்தும் லக்ஷ்மி பிரியா – வைரலாகும் புரோமோ!

தான் உட்காரவேண்டும் என அஸ்மிதா நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்த நிலையில், அவரை கயிற்றினால் இழுத்து, நாற்காலியிலிருந்து சாவன்யா வேலு கீழே தள்ளியுள்ளார். உடனே வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் அஸ்மிதாவை தூக்கியதுபோன்ற இந்த காட்சிகள் உள்ளது.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 23வது நாளின் 2வது புரோமோ குறித்த எக்ஸ் பதிவு:

இந்த நிகழ்ச்சியானது தற்போது மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது. வழக்கமாக வெளியான மற்ற சீசன்களை போல இல்லாமல், பிக் பாஸ் சீசன் 10 அதிரடியாகவே உள்ளது. வந்த முதல் வாரத்தில் போட்டியாளர்கள் மத்தியில் பெரும் மோதல்கள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விதத்தில் இந்த வாரத்தில் எந்த 3 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவார் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Follow Us