AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக்பாஸில் சூடுபிடிக்கும் ஆட்டம்… வீட்டிற்குள் வரும் 3 வைல்கார்ட் போட்டியாளர்கள் – வைரலாகும் வீடியோ!

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து பல சர்ப்ரைஸ்கள் பார்வையாளர்கள் பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இன்னும் மூன்று போட்டியாளர்களை வைல்கார்ட் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்ப உள்ளனர்.

பிக்பாஸில் சூடுபிடிக்கும் ஆட்டம்… வீட்டிற்குள் வரும் 3 வைல்கார்ட் போட்டியாளர்கள் – வைரலாகும் வீடியோ!
பிக்பாஸ் தமிழ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Sep 2026 20:38 PM IST

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெறும் ரியாலிட்டி ஷோவாக உள்ளது பிக்பாஸ் தமிழ். இந்த நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு முதல் தமிழ் மொழியில் ஒளிபரப்பாகி வருகின்றது. தொடர்ந்து 9 சீசன்கள் முடிவடைந்து தற்போது இந்த 2026-ம் ஆண்டில் 10-வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து 7 சீசன்களாக நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். அதனைத் தொடர்ந்து அவர் விலகுவதாக அறிவித்த பிறகு பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை 8-வது சீசனில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட சில போட்டியாளர்களை வீட்டிற்குள் அனுப்பி 100 நாட்களுக்கு மேல் அவர்களுக்கு போட்டிகளை நடத்தி அதில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை ஒளிபரப்புவார்கள்.

இந்த நிகழ்ச்சி தினமும் ஒரு மணி நேரம் விஜய் தொலைக்காட்சியிலும் ஹாட்ஸ்டார் ஓடிடியில் தொடர்ந்து 24 மணி நேரம் நேரலையும் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிலையில் முந்தைய சீசன்களை விட இந்த 10-வது சீசன் தமிழக மக்களிடையே அதிக அளவில் கவணத்தை ஈர்த்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸில் சூடுபிடிக்கும் ஆட்டம்… புதுவரவுகள் யார் யார்?

அதன்படி இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி தொடர்ந்து இதுவரை 22 நாட்கள் முடிவடைந்து இன்று 23-வது நாளில் உள்ளது. மொத்தம் 19 போட்டியாளர்கள் மற்றும் வைல்கார்ட் போட்டியாளர்கள் இரண்டு பேர் உள்ளே அனுப்பட்டனர். இதில் மூன்று பேர் வெளியேறிய நிலையில் தற்போது 18 போட்டியாளர்கள் உள்ளனர். அதிலும் மூன்று நபர்கள் நிச்சயமாக இந்த வாரம் வீட்டைவிட்டு வெளியேற உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது புது டர்னிங் பாய்ண்ட் என்று பிக்பாஸ் நிகழ்ச்சி குழு ஒரு ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் வரும் 4-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு புது போட்டியாளர்கள் மூன்று பேரை வைல்கார்ட் எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Ramayana: ஸ்ரீ ராமரின் அவதாரம்.. ரன்பீர் கபூரின் ராமாயணா படத்தின் BTS வீடியோ வெளியீடு!

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Abnil Avan: ஸ்ட்ரெயிட் அவுட்டா சார்பட்டா.. அன்பில் அவன் படத்திலிருந்து புது பாடல் வெளியானது!

Follow Us