AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக்பாஸில் மாஸ் காட்டிய குமரன்… வாயடைத்து நின்ற லக்‌ஷ்மி பிரியா – வைரலாகும் வீடியோ!

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ளே வந்தவர் நடிகர் குமரன். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதில் இருந்தே தொடர்ந்து ஒன்று செய்யாமல் இருக்கிறார் என விமர்சனங்கள் எழுந்த நிலையில் இன்று அவர் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிக்பாஸில் மாஸ் காட்டிய குமரன்… வாயடைத்து நின்ற லக்‌ஷ்மி பிரியா – வைரலாகும் வீடியோ!
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Sep 2026 15:39 PM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10) நிகழ்ச்சி தொடங்கி மூன்று வாரங்கள் முடிவடைந்து தற்போது 4-வது வாரம் சென்று கொண்டு இருக்கின்றது. இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து பார்வையாளர்களை கவரும் விதமாக செல்கிறது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் முந்தைய சீசன்களில் இல்லாத பல புது விசயங்களை புகுத்தி உள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி குழு. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் புதுப் புது நிகழ்வுகளுடன் சுவாரஸ்யமாக செல்லும் இந்தப் போட்டியில் உள்ள போட்டியாளர்களும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் காமென் மேன்களாக 4 பேர் உள்ளே சென்ற நிலையில் மற்றவர்கள் இணையதள பிரபலங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் ஒரு சிலர் தொடர்ந்து எல்லா விசயங்களுக்கும் சண்டைகளைப் போட்டு கூச்சலும் குழப்பமாக இருக்கும் அதே வீட்டில் ஒரு சிலர் மிகவும் அமைதியாக அனைவரையும் கவணிக்கும் நபராக உள்ளனர். அப்படி அவர்கள் அமைதியாக இருப்பதற்கு ஏன் இந்த வீட்டில் இருக்க வேண்டும் என்று மற்ற போட்டியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிக்பாஸில் மாஸ் காட்டிய குமரன்… வாயடைத்து நின்ற லக்‌ஷ்மி பிரியா:

இந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் தன்னை அனைவரும் மிக்சர் மாமா என்று கூறுவதற்கு எதிராக பல விசயங்களை வெளிப்படையாக பேசியுள்ளார் நடிகர் குமரன். இன்றைய டாஸ்கில் பேசிய குமரன் என்ன விசயம் நடக்கிறது என்பது தெரியாமல் தொடர்ந்து கத்திவிட்டு அடுத்த நாள் வந்து மண்ணிப்பு கேட்கும் பழக்கம் எனக்கு இல்லை. அதற்கு பதிலாக அமைதியாக இருந்து என்ன விசயமோ அதையே வெளிப்படையாக தேவைப்படும் இடத்தில் பேசுவேன் என்று கூறுகிறார். இதற்கு பல போட்டியாளர்கள் கைதட்டி வரவேற்கிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… ஃபகத் பாசிலும் நானும்… மனம் திறந்து பேசிய நடிகர் சூர்யா!

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… சிவகார்த்திகேயன் குறித்து கங்கை அமரனின் பேச்சு… இயக்குநர் வெங்கட் பிரபு கொடுத்த விளக்கம்!

Follow Us