என் அன்பிற்கினிய.. உணர்வுகளால் நிரம்பிவழிந்த பிக் பாஸ் ஹவுஸ் – வைரலாகும் புரோமோ!
BB 10 Promo: பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது சிறப்பாக தொடங்கி நடைபெற்றுவருகிறது. இன்றுடன் இந்நிகழ்ச்சியானது ஆரம்பமாகி கிட்டத்தட்ட 33 நாட்களான நிலையில், சிறப்பாக நடைபெறுகிறது. அந்த விதத்தில் இன்று (09/10/2026) வெளியான 2வது புரோமோவில் பிக் பாஸ் ஹவுஸ் முழுக்க கண்ணீர் வெள்ளத்தில் நிரம்பிவழிகிறது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுப்பாளராக தொகுத்துவரும் நிகழ்ச்சிதான் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10). விஜய் சேதுபதி கடந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி முதல் தொகுத்துவரும் நிலையில், பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியை தீவிரமாக தொகுத்துவருகிறார். அந்த விதத்தில் இந்த நிகழ்ச்சியானது கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி முதல் தொடங்கிய நிலையில், இன்றுடன் (09/10/2026) கிட்டத்தட்ட 33வது நாட்களை கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 16 போட்டியாளர்கள் இருகிறார்கள். 5வது வாரத்தின் தொடக்கத்தில் மூன்று வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் நுழைந்த நிலையில், ஆட்டம் விறுவிறுப்பாக அமைந்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் டிடிஃஎப் வாசன், அக்ஷிதா அசோக் மற்றும் கரீஷ்மா போன்ற போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்துள்ளார்.
அந்த விதத்தில் இந்த வாரத்தின் வீட்டின் தலைவராக அக்ஷிதா இருந்தார். இந்நிலையில் பிக் பாஸில் ஒரே சண்டைகளாக இருந்த நிலையில், இன்று வெளியான 2வது புரோமோவில் கண்ணீருடன் போட்டியாளர்கள் உள்ளனர்.




இதையும் படிங்க: ரணபாலி மொக்க… ஜெயிலர் 2 போகலாம்.. இணையத்தில் தனது படத்தை பற்றி பரவும் விமர்சனங்கள் – விஜய் தேவரகொண்டா பேச்சு!
பிக் பாஸ் சீசன் 10ல் கண்ணீரில் போட்டியாளார்கள்:
பிக் பாஸ் நிகழ்ச்சியானது தற்போது 5வது வாரத்தின் இறுதியில் உள்ளது. அந்த விதத்தில் என் அன்பிற்கினிய என்ற டாஸ்க் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அந்த டாஸ்கில் போட்டியாளர்கள், தங்களுக்கு பிடித்த போட்டியாளர்கள் மற்றும் தனது வீடு மற்றும் குடும்பத்தை மிஸ் செய்வது குறித்து ஒரு கார்டில் எழுதி அதை வீட்டின் போட்டியாளர்களுக்கு முன் படிக்கவேண்டும். அந்த டாஸ்கில் எல்லா போட்டியாளர்களும் பேசியிருந்த நிலையில், அனைவரும் கண்ணீரில் மூழ்கியுள்ளனர். இது தொடர்பான புரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: ஒர்ஸ்ட் ஃபர்பாமர் ஆப் தி வீக்.. டிடிஃஎப் வாசன் மற்றும் ஷமா இடையே பலத்த மோதல் – தீயாய் பரவும் புரோமோ!
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 33வது நாளின் 2வது புரோமோ குறித்த எக்ஸ் பதிவு:
#Day33 #Promo2 of #BiggBossTamil
Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/19h2ggORik
— Vijay Television (@vijaytelevision) October 9, 2026
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் சிறப்பாக தங்களின் பணியை சிறப்பாக செய்துவருகிறார்கள். இந்த நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த வாரத்தின் இறுதியில் எந்த போட்டியாளர் வெளியேறுவார் என தெரியவில்லை. ஒருவேளை நோ எவிக்ஷனாக இருப்பதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளதாக வட்டாரங்கள் கூறுகிறது.