Preity Mukhundhan: கெரியரிலே பெஸ்ட் நடிப்பு.. அசோக் செல்வனைப் பாராட்டி பேசிய ப்ரீத்தி முகுந்தன்!
Preity Mukhundhan Praises Ashok Selvan: தென்னிந்திய சினிமாவில் இளம் கதாநாயகியாக மக்கள் மத்தியில் பேமஸானவர் ப்ரீத்தி முகுந்தன். இவர் அசோக் செல்வனுக்கு ஜோடியாக அன்பில் அவன் படத்தில் நடித்திருந்தார். இப்படமானது வெளியாகி சிறப்பான வெற்றியை பெற்றிருந்த நிலையில், இப்படத்திற்காக அசோக் செல்வன் செய்த தியாகங்கள் குறித்து ப்ரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார்.
கோலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர்தான் ப்ரீத்தி முகுந்தன் (Preity Mukhundhan). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த விதத்தில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் அன்பில் அவன். இந்த படத்தை இயக்குநர் ஆர். கார்த்திகேயன் (R Kaarthikeyan) இயக்க, அசோக் செல்வன் (Ashok Selvan) தனது சொந்த தயரிப்பில் உருவாக்கியிருந்தார். இந்த படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இதில் ப்ரீத்தி முகுந்தன் நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2026ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படமானது வெளியாகி மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. அந்த விதத்தில் இந்த படத்தின் மீது அதிக வரவேற்பு இருக்கிறது.
சமீபத்தில் இப்படத்தின் சக்ஸஸ் மீட் நடைபெற்றிருந்தது. அதில் பேசிய நடிகை ப்ரீத்தி முகுந்தன், அன்பில் அவன் படத்திற்காக அசோக் செல்வன் செய்த தியாகங்கள் மற்றும் கஷ்டங்கள் குறித்து அவர் தெரிவித்துள்ளார். அது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: லீடராக இருக்கனாலவே என்னால அத பண்ண முடியாது… பிக்பாஸில் கண்ணீர்விட்ட அக்ஷிதா – வைரலாகும் வீடியோ!
அன்பில் அவன் பட சக்ஸஸ் மீட்டில் அசோக் செல்வன் குறித்து பேசிய ப்ரீத்தி முகுந்தன்:
அந்த நிகழ்ச்சியின் நேர்காணலில் பேசிய ப்ரீத்தி முகுந்தன், “நான் அசோக்கை பார்ததிலிருந்தே, இந்த படத்தில் அவர் மிகவும் பயங்கரமாக வேலையோ செய்ததை பார்த்தேன். அவர் இந்த படத்திற்காக நிறைய முயற்சிகள், கஷ்டங்கள் எல்லாம் பட்டுருக்காரு. இப்படிப்பட்ட சிறந்த நடிகரை தமிழ் சினிமா கொண்டுள்ளது. அவரை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
இதையும் படிங்க: டோரதி பார்க்கும் முன்னால நீங்க நிறைய இந்த சமூகத்தை, மனிதர்களை படிக்கனும் – சேரன் வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு!
அதிலும் படத்தின் கடைசியில் அவர் நடித்த ஆக்ஷன் காட்சிகள் மிகவும் சிறப்பாக இருந்தது. அவர் இப்படத்தில் இணை எழுத்தாளராகவும் பணியாற்றியிருக்கிறார். அவரின் வேலைகளை நான் பின் இருந்து பார்த்திருக்கிறேன். அறிமுக நடிகர்களையும் இப்படத்தில் அவர் அறிமுகம் செய்துள்ளார். இப்படத்தின் நடிகராக, தயாரிப்பாளாராக எல்லா விதங்களிலும் அவரை நான் பாராட்ட நினைக்கிறேன்” என அதில் தெரிவித்திருந்தார்.
அன்பில் அவன் படம் குறித்து நடிகர் அசோக் செல்வன் வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Thank you machi ❤️❤️
Do watch when you find the time!— Ashok Selvan (@AshokSelvan) October 2, 2026
அன்பில் அவன் திரைப்படமானது கடந்த 2026ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படமானது மக்கள் மத்தியில் மிகவும் சிறப்பான வரவேற்பைப் பெற்றுவருகிறது. திரையரங்குகளில் இப்படத்திற்கு சிறப்பான வரவேற்பு மக்களிடையே இருக்கிறது. 2 கிட்டத்தட்ட ஆண்டுகளுக்கு பிறகு அசோக் செல்வன் ஹீரோவாக நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவரும் படமாக இந்த அன்பில் அவன் படம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.