Preity Mukhundhan: ஒரு ஆக்ஷன் ரோல் கிடைப்பது மிகவும் அறிய வாய்ப்பு – பிளாஸ்ட படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்த ப்ரீத்தி முகுந்தன்!
Preity Mukhundhan on Her Action Role in Blast Movie: தென்னிந்திய மொழிகளில் தொடர்நது படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துவருபவர் நடிகை ப்ரீத்தி முகுந்தன். இவர் அர்ஜுன் மற்றும் அபிராமியின் நடிப்பில் உருவாகியுள்ள பிளாஸ்ட் படத்தில் ஆக்ஷ்ன் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சண்டை காட்சிகளில் நடித்த அனுபவம் குறித்து ப்ரீத்தி முகுந்த பகிர்ந்த விஷயம் பற்றி பார்க்கலாம்.
தமிழ் மக்கள் மத்தியில் சாய் அபயங்கரின் (Sai Abyankkar) இசையில் வெளியான “ஆச கூட” (Aasa Kooda) என்ற பாடலின் மூலம் பிரபலமானவர் ப்ரீத்தி முகுந்தன் (Preity Mukhundhan). இவர் இந்த பாடலின் மூலம் தென்னிந்திய மக்கள் மத்தியில் பிரபலமான நிலையில், இதையடுத்து சினிமாவிலும் நடிக்க தொடங்கிவிட்டார். தமிழில் கவினின் (Kavin) நடிப்பில் வெளியான ஸ்டார் (Star) படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதையடுத்து கண்ணப்பா படத்திலும் நிமிலி என்ற வேடத்தில் நடித்து தென்னிந்திய மக்கள் மத்தியில் பிரபலம் பெற்றார். அந்த வகையில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடிப்பதில் கவனம் செலுத்திவருகிறார் இவர். அந்த வகையில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் (Arjun) மற்றும் அபிராமியின் (Abirami) நடிப்பில் தமிழில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள படம் பிளாஸ்ட் (Blast Movie).
ஏஜிஎஸ் என்டேர்டைமென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் (Subash K. Raj) இயக்கியுள்ளார். இப்படமானது ஒரு குடும்ப ஆக்ஷன் கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், ட்ரெய்லர் வெளியாகி பலரையும் ஈர்த்தது. இந்நிலையில் இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்தது குறித்து நடிகை ப்ரீத்தி முகுந்தன் பேசியுள்ளார்.




இதையும் படிங்க: சினிமாவில் ஏழு முதலமைச்சர்களுடன் பணியாற்றிய ஒரே நடிகை.. அட எந்த நடிகை தெரியுமா?
பிளாஸ்ட் படத்தில் ஆக்ஷ்ன் காட்சியில் நடித்தது பற்றி ப்ரீத்தி முகுந்தன்:
நேர்காணல் வீடியோ ஒன்றில் பேசியிருந்த ப்ரீத்தி முகுந்தன், “நான் உண்மையிலே இப்படத்தில் நடிக்கும்போது ரொம்பவே ஆர்வமாக இருந்தேன். ஒரு ஆக்ஷன் ரோலில் நடிக்க கிடைப்பது மிகவும் அரிதான வாய்ப்பு. இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க உதவியாக இருந்த பிரபு மாஸ்டருக்கு நன்றி. ஒரு பெண்களை எவ்வாறு ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து, அதை அழகாக சொல்லிக்கொடுத்து மிகவும் அற்புதமாக இருந்தது அவருடன் பணியாற்றுவதற்கும், மேலும் இயக்குநர் சுபாஷ் கே ராஜும் ஒரு ஆக்ஷன் கதாபாத்திரங்களை எவ்வாறு காட்டவேண்டும் என்று முயற்சித்ததற்கும் மிக்க நன்றி.
இதையும் படிங்க: அதிர்ஷ்டத்தை நம்பும் சூதாட்டக்காரன்.. துல்கர் சல்மானின் ஐஅம் கேம் படத்தின் கதைகளை இதுவா?
இப்படம் வெறும் சண்டை காட்சிகள் மட்டுமில்லாம, எனக்கு ஒரு அனுபவமாக இருந்தது. மேலும் இப்படத்தின் இசையமைப்பும் நான் எதிர்பார்க்கவில்லை. ரவி பஸ்ரூ சாரின் இசையில், அதுவும் ஸ்லோமோஷன் காட்சிகளுக்கு அவரின் இசையில் நன் ஒரு பகுதியாக இருப்பேன் என நினைத்துக்கூட இல்லை. நிச்சயம் இந்த படத்தை பாருங்கள்” என அதில் அவர் கூறியிருந்தார்.
பிளாஸ்ட் திரைப்படம் குறித்து ப்ரீத்தி முகுந்தன் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
அர்ஜுன், ப்ரீத்தி முகுந்தன் மற்றும் அபிராமியின் நடிப்பில் ஒரு குடும்ப ஆக்ஷன், காமெடி மற்றும் அதிரடி படமாக இந்த பிளாஸ்ட் படம் தயாராகியுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், படமானது வரும் 2026 மே 28ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.