சினிமாவில் ஏழு முதலமைச்சர்களுடன் பணியாற்றிய ஒரே நடிகை.. அட எந்த நடிகை தெரியுமா?
7 Chief Ministers & Manorama: சினிமாவில் பல நடிகர்கள், சினிமாவில் ஹீரோக்களாக இருந்து பிறகு அரசியலில் தலைவர்களாக மாறியிருக்கிறார்கள். அவ்வாறு சினிமாவில் பணியாற்றி பிறகு, முதலமைச்சரான நடிகர்கள் பலர். இந்நிலையில் கிட்டத்தட்ட 7 முதலமைச்சர்களுடன் சினிமாவில் பணியாற்றிய ஒரே நடிகர் யார் தெரியுமா?. அது பற்றி விவரமாக பார்க்கலாம்.
சினிமாவில் நடிகர்களாக (Cinema), எழுத்தாளராக மற்றும் இயக்குநர்களாக பணியாற்றியல் பலரும் சினிமாவை கடந்து அரசியலிலும் சாதனை படைத்திருக்கிறார்கள். பல சினிமா பிரபலங்கள் முதலமைச்சராகவும் (Chief Minister ) இருக்கின்றனர். தற்போது தமிழகத்திலும் அதே நிலைதான். சினிமாவில் ஹீரோவாக நடித்துவந்த முதல்வர் விஜய் (CM Vijay), தனது 69வது படத்திற்கு பிறகு முழுவதுமாக சினிமாவிலிருந்து விலகி, தமிழக அரசியலில் ஈடுபட்டுவந்தார். அரசியலில் ஈடுபட்ட 2 ஆண்டுகளில் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று, தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கிறார். இவரு சினிமாவிலிருந்து வந்து, அரசியலில் வெற்றிபெற்ற பிரபலங்கள் பலர் இருகிறார்கள். அந்த வகையில் 7 முதலமைச்சர்களுடன் சினிமாவில் பணியாற்றிய ஒரே நடிகை யார் தெரியுமா?.
இவர் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, தனது வயதான பருவத்திலும் சினிமாவை விட்டு விலகாதவர். அட அந்த நடிகை வேறுயாருமில்லை பெண் சிவாஜி மற்றும் ஆச்சி என்று அழைக்கப்பட்ட நடிகை மனோரமாதான் (Manorama ). இவர் முதலமைச்சரான 7 சினிமா பிரபலங்களுடன் படங்களில் பணியாற்றியுள்ளார்.
இதையும் படிங்க: தமிழக அரசிற்கான ஓடிடி.. முதல்வர் விஜய்க்கு கோரிக்கை வைத்த விஜய் சேதுபதி!




நடிகை மனோரமா பணியாற்றிய 7 முதலமைச்சர்களுடைய விவரங்கள்:
நடிகை மனோரமா எந்தெந்த மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் படங்களில் பணியாடறியுள்ளார் என்பது குறித்து முழுமையான விவரங்கள் இதோ.
- ஜெ.ஜெயலலிதா (தமிழக முதலமைச்சர்) – தமிழகத்தில் ரசிகர்களாலும், தொண்டர்களால் அம்மா என்று அன்போடு அழைக்கப்பட்டுவந்தவர் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா. இவருடன் நடிகை மனோரமா பல படங்களில் நடித்துள்ளார். தாய், அன்னை வேளாங்கண்ணி போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார். ஜெயலலிதா மற்றும் மனோரமா இருவருமே குழந்தை நட்சத்திரங்களாக இருந்ததிலிருந்தே நல்ல உறவைப் பேணி வந்தனர்.
- எம். ஜி. ராமச்சந்திரன் (தமிழக முதலமைச்சர்) (MGR) – தமிழ் சினிமாவின் கடவுளாகப் போற்றப்படும் எம்.ஜி.ஆர் உடன், நடிகை மனோரமா குழந்தை நட்சத்திரமாக இருந்து, துணை நடிகையாகவும் இணைந்து நடித்துள்ளர்.
- எம்.கருணாநிதி (தமிழக முதலமைச்சர்) – முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வெறும் அரசியல்வதாகி மட்டுமல்ல, சினிமாவில் பல படங்ககளில் கதைகளை எழுதியுள்ளார். இவர் சினிமாவில் சிறந்த எழுத்தாளராகவும் இயக்குநராகவும் இருந்திருக்கிறார். எழுதி இயக்கியப் படத்தில் மனோரமா நடித்துள்ளார்.
- ஜானகி ராமச்சந்திரன் (தமிழ்நாடு முதலமைச்சர்) – நடிகரும், அரசியல்வாதியுமான எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி. இவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பணியாற்றினார். நடிகை மனோரமா அவருடன் படங்களில் பணியாற்றியிருக்கிறார்.
- என்.டி. ராமராவ் – என்.டி.ஆர். (ஆந்திர முதலமைச்சர்) – ஆந்திரப் பிரதேச முதலமைச்சரும், சிறந்த தெலுங்குத் திரைப்பட நடிகருமான என்.டி.ஆருடன் மனோரமா முக்கியப் பாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
- ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி – ஒய்.எஸ்.ஆர் (ஆந்திர முதலமைச்சர்) – ஒய்.எஸ்.ஆர். ஒரு முழுமையான நடிகர் கிடையாது . இருப்பினும், அவர் ஒரு திரைப்படத்தில் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்தார். அந்த திரைப்படங்களில் நடிகை மனோரமா நடித்திருக்கிறார்.
- டி. தேவராஜ் அரசு (கர்நாடக முதலமைச்சர்) – கர்நாடக முதலமைச்சர் தேவராஜ் அரசும் ஒரு திரைப்படத்தில் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்தார். அந்தப் படத்தில் மனோரமாவும் ஒரு துணை வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவாறு கிட்டத்தட்ட 7 முதலமைச்சர்களுடன் நடிகை மனோரமா படங்களில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டோக்கியோவில் இந்திய நடிகை.. சர்வதேச மேடையில் ராஷ்மிகாவிற்கு கிடைத்த அங்கீகாரம்!