ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் எப்போது? தயாரிப்பாளர் சொன்ன அப்டேட்
Jana Nayagan Movie Release Update Viral On Social Media : தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வந்து தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள தளபதி விஜயின் நடிப்பி உருவான ஜன நாயகன் படம் எப்போது வெளியாகும் என்பது குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் தளபதி விஜய். இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் படங்களில் நடித்து வந்தாலும் இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது. சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது யாரும் எதிர்பாராத ஒன்றை செய்தார் தளபதி விஜய். ஆம் இனி படங்களில் நடிக்கப் போவது இல்லை முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளேன் என்று தெரிவித்தார். அந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அவரது நடிப்பில் இறுதியாக உருவான ஜன நாயகன் படம் தான் கடைசி படம் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.
இந்த ஜன நாயகன் படம் சென்சார் பிரச்சனை காரணமாக கடந்த ஜனவரி மாத வெளியீட்டி இருந்து ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சென்சார் எப்போது வழங்கப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதற்கு முன்னதாக தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து தளபதி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில் வெற்றிப் பெற்று ஆட்சி அமைத்தார். தற்போது தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். இந்த நிலையில் அவரது நடிப்பில் இறுதியாக உருவான ஜன நாயகன் படம் எப்போது வெளியாகும் என்று தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.




விரைவில் ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்:
ஜன நாயகன் படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா சமீபத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். சாமி தரிசனம் செய்து முடித்த பிறகு அவர் பேசிய போது, ’ஜனநாயகன்’ திரைப்படம் குறித்து அவர் சுருக்கமாகப் பேசினார். “நாங்கள் தற்போது தணிக்கைச் சான்றிதழுக்காகக் காத்திருக்கிறோம். அது எந்த நேரத்திலும் கிடைக்கலாம்; சான்றிதழ் கிடைத்த உடனேயே நாங்கள் படத்தை வெளியிடுவோம்,” என்று அவர் கூறினார்.
Also Read… இயக்குநர் டூ நாயகன்.. இந்த போட்டோவில் இருக்கும் சிறுவன் எந்த நடிகர்-னு தெரியுமா?
இணையத்தில் வைரலாகும் ஜன நாயகன் தயாரிப்பாளர் பேச்சு:
.@KvnProductions : Release date of Jana Nayagan will be out as soon as we get the censor certificate.
We have put the title JANA NAYAGAN & now Vijay sir has become the JANA NAYAGAN (Chief Minister) of Tamil Nadu. 🔥😬 pic.twitter.com/3h8qOQ9oVU
— KARTHIK DP (@dp_karthik) May 22, 2026
Also Read… கருப்பு படத்தின் வெற்றியை தொடர்ந்து புது படங்களுக்கு கதை கேட்கும் சூர்யா… வைரலாகும் தகவல்