ஜன நாயகன் ஜுன் மாதத்தில் எப்போது வெளியிட திட்டம் தெரியுமா? வைரலாகும் தகவல்
Jana Nayagan Movie Release Update Viral On Social Media | நடிகரும் முதலமைச்சருமான தளபதி விஜயின் நடிப்பில் இறுதியாக உருவாகி உள்ள ஜன நாயகன் படம் எப்போது திரையரங்குகளில் வெளியாகும் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக மக்களிடையே வரவேற்பைப் பெற்று வந்த தளபதி விஜய் தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இவர் தேர்தலில் வெற்றிப் பெறுவதற்கு முன்னதாக தான் நடிக்கும் இறுதிப் படம் என்று தெரிவித்த ஜன நாயகன் படம் எப்போது வெளியாகும் என்பது குறித்த அப்டேட் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது. இயக்குநர் எச்.வினோத் எழுதி இயக்கிய இந்த படம் தெலுங்கு சினிமாவில் நடிகர் பாலையா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த பகவந்த் கேசரி என்ற படத்தின் ரீமேக் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் அந்தப் படத்தை அப்படியே எடுக்காமல் அதனை தழுவி எடுத்து உள்ளதாக முன்னதாக பேட்டி ஒன்றில் இயக்குநர் எச்.வினோத் தெரிவித்து இருந்தார். இதனால் படம் நிச்சயமாக நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் தளபதி விஜய் உடன் இணைந்து நடிகர்கள் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல் மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து இருந்தார். படம் கடந்த ஜனவரி மாதமே வெளியாகவேண்டிய நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக படம் திரையரங்குகளில் வெளியாகாமல் ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.




ஜன நாயகன் ஜுன் மாதத்தில் எப்போது வெளியிட திட்டம் தெரியுமா?
இந்த நிலையில் இந்த ஜன நாயகன் படத்தின் சென்சார் பிரச்சனைகள் தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில் படம் எப்போது வெளியாகும் என்று தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி ஜன நாயகன் படம் வருகின்ற ஜூன் மாதம் நடிகரும் முதலமைச்சருமான தளபதி விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாக உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி படம் வருகின்ற ஜூன் மாதம் 18-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… விவாகரத்து கிடைக்கும் வரை படம் நடிக்க மாட்டேன் – ரவி மோகன் பரபர பேட்டி
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
A report says efforts are being made to release #JanaNayagan on June 19. pic.twitter.com/2W19oipf3z
— Movie Tamil (@_MovieTamil) May 16, 2026
Also Read… ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது ரன்வீர் சிங்கின் துரந்தர் 2 படக்குழு – எப்போது தெரியுமா?