AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விவாகரத்து கிடைக்கும் வரை படம் நடிக்க மாட்டேன் – ரவி மோகன் பரபர பேட்டி

Actor Ravi Mohan sensational interview vairal on social media: தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ரவி மோகன். இவர் இன்று அளித்தப் பேட்டியில் தனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை இனி படங்களில் நடிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

விவாகரத்து கிடைக்கும் வரை படம் நடிக்க மாட்டேன் – ரவி மோகன் பரபர பேட்டி
ரவி மோகன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 16 May 2026 12:48 PM IST

தமிழ் சினிமாவில் வெளியான ஜெயம் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் ரவி மோகன். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. முன்பு எல்லாம் நடிகர் ரவி மோகன் நடிப்பில் உருவாகும் படம் தொடர்பான செய்திகள் மட்டுமே செய்தியாகி வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக அவரது சொந்த வாழ்க்கை தொடர்பான விசயங்களும் அதிக அளவில் செய்திகளில் இடம் பிடித்து வருகின்றது. அந்த வகையில் கடந்த 2024-ம் ஆண்டு தனது மனைவி ஆர்த்தியை விட்டு விலகுவதாகவும் இனி இருவரும் சேர்ந்து வாழப்போவதில்லை விவாகரத்திற்கு வழக்கு பதிவு செய்ததாகவும் நடிகர் ரவி மோகன் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அவரது மனைவி ஆர்த்தி தன்னிடம் எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடத்தாமல் ரவி மோகன் விவாகரத்து தொடர்பாக தன்னிச்சை முடிவு எடுத்துள்ளார் என்று ஒரு கருத்தை தெரிவித்தார். இருவரும் மாறிமாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டும் போது நடிகர் ரவி மோகனுக்கு பாடகி கெனிஷா உடன் திருமணத்தை மீறிய உறவு உள்ளதாக ஆர்த்தி ஒரு குற்றச்சாட்டை வைத்தார். ஆனால் ரவி மோகன் அவர் தனது தோழி என்றே குறிப்பிட்டார். இந்த செய்தி வெளியான பிறகு ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் பொது இடங்களில் அதிக அளவில் தென்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒரு சிலர் இது அவர்களின் சொந்த வாழ்க்கை நான் ஏன் கருத்து சொல்ல வேண்டும் என்று கூற பலர் ரவி மோகன் ஆர்த்தி விவகாரத்தில் தங்களது கருத்துகளை சமூக வலைதளப் பக்கத்தில் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தனர்.

விவாகரத்து கிடைக்கும் வரை படம் நடிக்க மாட்டேன்:

இப்படி இருக்கும் சூழலில் இந்த விசயத்தால் தான் மிகவும் பாதிக்கப்பட்டதாக பாடகி கெனிஷா சென்னையை விட்டு வெளியேறுவதாகவும் இனி ரவி மோகனுடம் எந்த விதத்திலும் தொடர்பில் இருக்க மாட்டேன் என்பது போல கூறி வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் தற்போது நடிகர் ரவி மோகன் செய்தியாளர்களை சந்தித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதன்படி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரவி மோகன் தன் தரப்பில் இருந்து எந்தவிதமான கருத்துகளையும் தெரிவிக்காமல் இருப்பதால் தான் மீது குற்றம் இருப்பதாக அர்த்தம் இல்லை என்றும் இத்தனை நாள் பொருமையாக இருந்தேன் இனி இருக்க மாட்டேன் என்று தெரிவித்த ரவி மோகன் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று தெரிவித்தார். மேலும் பலர் தன்னை ஒரு பஞ்சிங் பேக் போன்று யூஸ் செய்துள்ளார்கள் என்று தெரிவித்த ரவி மோகன் இனி தனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை படங்களில் நடிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… சிவகார்த்திகேயனின் வேலும் மயிலும் ஆல்பம் பாடல் 1 மில்லியன் பார்வைகளை கடந்தது

இணையத்தில் வைரலாகும் ரவி மோகனின் பேச்சு:

Also Read… ஜூன் மாதத்தில் ரிலீஸ் தேதியை குறிவைக்கும் ஜன நாயகன் படக்குழு… வைரலாகும் தகவல்

Follow Us