AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

துடக்கம் பட இயக்குநருடன் புதிய திரைப்படத்தில் இணைந்த மோகன்லால் – வைரலாகும் பதிவு!

Mohanlal & Jude Anthany Joseph Team Up: மலையாள சினிமாவில் உச்ச நாயகனாக இருந்துவருபவர் மோகன்லால். இவரின் நடிப்பில் இதுவரைக்கும் கிட்டத்தட்ட 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் உருவாகியுள்ளது. அந்த வகையில், துடக்கம் பட இயக்குநருடன் புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளதாக மோகன்லால் அறிவித்துள்ளார்.

துடக்கம் பட இயக்குநருடன் புதிய திரைப்படத்தில் இணைந்த மோகன்லால் – வைரலாகும் பதிவு!
ஜூட் அந்தோனி ஜோசப் மற்றும் மோகன்லால்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 16 Aug 2026 21:21 PM IST

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களிள் ஒருவராக இருந்துவருபவர் மோகன்லால் (Mohanlal). இவரின் நடிப்பில் மலையாளம் சினிமாவில் புது புது திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இவரின் நடிப்பில் இறுதியாக திரிஷ்யம் 3 (Drishyam 3) என்ற திரைப்படம் வெளியானது. இந்த படமானது கடந்த 2026ம் ஆண்டு மே மாதத்தில் வெளியானது. திரிஷாம் 1 மற்றும் 2ன் தொடர்ச்சியாக இந்த திரைப்படம் வெளியான நிலையில், மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்திற்கு பின், தனது மகள் விஸ்மயா (Vismaya) மோகன்லாலை நடித்திருந்த துடக்கம் (Thudakkam) என்ற படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதியில் வெளியாகியிருந்த நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்திற்கு பின் புது படங்களிலும் மோகன்லால் நடித்துவருகிறார். துடக்கம் படம் சிறப்பான வரவேற்பை பெற்றுவரும் நிலையில், அந்த படத்தின் இயக்குநர் ஜூடு ஆந்தனி ஜோசப் (Jude Anthany Joseph) இயக்கத்தில் புதிய படத்தில் இணைவதாக மோகன்லால் அறிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ரஜினிகாந்தின் 51வது வருட சினிமா.. கேக் வெட்டி கொண்டாடிய தர்மன் படக்குழு!

இயக்குநர் ஜூடு ஆந்தனி ஜோசப்பின் இயக்கத்தில் புது படத்தில் இணைவது பற்றி மோகன்லால் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த பதிவில் மோகன்லால், நான் இயக்குநர் ஜூடு ஆந்தனி ஜோசப் இயக்கத்தில் புதிய படத்தில் இணைவதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இப்படம் 2027ம் ஆண்டில் வெளியாகும், அப்டேட்டுகளும் விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஜூடு ஆந்தனி ஜோசப் படங்கள்:

கடந்த 2014ம் ஆண்டில் நிவின் பாலி மற்றும் நஸ்ரியா இணைந்து நடித்திருந்த படம்தான் ஓம் சாந்தி ஓசானா. இந்த படத்தின் மூலம் இயக்குநராக நுழைந்தவர் ஜூடு ஆந்தனி ஜோசப். இந்த படத்தின் முழக்கம் இயக்குநராக மலையாளம் சினிமாவில் அறிமுகமான இவர், தொடர்ந்து ஒரு முத்தாச்சி கதா, சாராஸ் மற்றும் 2018ம் போன்ற படங்களை இயக்கியிருந்தார். இந்த படங்களானது இவருக்கு மக்கள் மத்தியில் சிறப்பான பவரவேற்பை கொடுத்திருந்தது.

இதையும் படிங்க: தனுஷ் சாருடனான படம் எனது ட்ரீம்.. ஸ்டார் பட இயக்குநர் ஓபன் டாக்!

மேலும் இந்த படங்களை அடுத்து இவர் இறுதியாக இயக்கியிருந்த படம் துடக்கம். இந்த படத்தில் மோகன்லாலின் மகள் விஷ்மயா இதில் நாயகியாக நடித்திருந்தார். இதில் மோகன்லாலும் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். அது பிடித்துப்போன மோகன்லால், இயக்குனர் ஜூடு ஆந்தனி ஜோசப் இயக்கத்தில் புதிய படத்தில் இணையவுள்ளதாக அறிவித்துள்ளார்.

Follow Us