AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Dharman: ரஜினிகாந்தின் 51வது வருட சினிமா.. கேக் வெட்டி கொண்டாடிய தர்மன் படக்குழு!

Rajinikanth's 51 Years in Cinema: பான் இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்துவருபவர் ரஜினிகாந்த். இவர் இன்று, (15/08/2026) தனது 51வது வருட சினிமா பயணத்தை கடந்துள்ளார். அதை கொண்டாடவும் விதத்தில், தர்மன் படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது.

Dharman: ரஜினிகாந்தின் 51வது வருட சினிமா.. கேக் வெட்டி கொண்டாடிய தர்மன் படக்குழு!
ரஜினியின் 51வது சினிமாவில் வருடத்தை தர்மன் படக்குழுவினர் கொண்டாடினர்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 15 Aug 2026 18:23 PM IST

தென்னிந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்துவருபவர் ரஜினிகாந்த் (Rajinikanth). இவரின் நடிப்பில் இதுவரை தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 171 திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. ரஜினிகாந்த் கடந்த 1975ம் ஆண்டில் இயக்குநர் கே.பாலசந்தரின் (K. Balachander) இயக்கத்தில், அபூர்வ ராகங்கள் (Apoorva Raagangal) என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். இந்த படத்தில் கமல்ஹாசன் (Kamal Haasan) மற்றும் ஸ்ரீவித்யா போன்ற நடிகர்களும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி இன்றுடன் கிட்டத்தட்ட 51 வைத்து வருடத்தை கடந்துள்ளது. அந்த வகையில் இன்றுடன் ரஜினிகாந்தும் சினிமாவில் நுழைந்து கிட்டத்தட்ட 51 ஆண்டுகள் கடந்துள்ளது. அதை முன்னிட்டு தர்மன் (Dharman) படக்குழு ஸ்பெஷல் வீடியோ வெளியிட்டிருந்தது.

இதையடுத்து தற்போது தர்மன் படக்குழு அவரின் 51வது வருட பயணத்தை கொண்டாடவும் விதத்தில், கேக் வெட்டி செலிபிரேட் செய்துள்ளது. இது தொடர்பான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இது இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: வேதாளம் படத்தில் அந்த பாடல் வேண்டாம் என்று சொன்னேன் – அனிருத் ரவிச்சந்தர்

ரஜினிகாந்தின் 51வது திரைப் பயணத்தை கேக் வெட்டி கொண்டாடிய வீடியோவை வெளியிட்ட தர்மன் படக்குழு:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இன்றுடன் (15/08/2026) சினிமாவில் நுழைந்து 51வது ஆண்டு ஆகியுள்ளது. அதை கொண்டாடவும் விதத்தில் தர்மன் படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இந்த இந்த கொண்டாட்டத்தில் தர்மன் பட கெட்டப்பில், ரஜினிகாந்த் இருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. ரஜினிகாந்துடன் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, சிம்ரன் மற்றும் ராஷி கண்ணா போன்றவர்களுடன் இணைந்து கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜின் டிசி பட வெற்றி.. கேக் வெட்டி கொண்டாடிய AA23 படக்குழு!

தர்மன் படத்தின் ஷூட்டிங் நிலை என்ன:

தர்மன் திரைப்படத்தில் ரஜினிகாந்த் டாக்டர் வேடத்தில் நடித்துள்ளார். அவரின் மனைவியாக சிம்ரன் நடித்துவருகிறார். மேலும் நடிகை ராஷி கண்ணா மிக முக்கியமான வேடத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2026ம் ஆண்டு ஜூலை இறுதியில் தொடங்கிய நிலையில், ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கும் முன் இணைந்திருந்தார். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் முதற்கட்டமாக முடிந்துள்ளதாம். மேலும் 2வது ஷெட்டியூல் நடைபெற்றுவருகிறதாம். இப்படத்தை 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறது.

Follow Us