AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கருப்பு படத்திற்காக குரல் கொடுக்கும் பிரபலங்கள் – வைரலாகும் எக்ஸ் பதிவுகள்!

Celebrities expressing their support for the Karuppu film crew | தமிழ் சினிமாவில் மிகவும் பிரமாண்டமாக உருவாகி இன்று திரையரங்குகளில் வெளியாக இருந்த கருப்பு படம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் பிரபலங்கள் பலர் தங்களது ஆதரவை படக்குழுவினருக்கு தெரிவித்து வருகின்றனர்.

கருப்பு படத்திற்காக குரல் கொடுக்கும் பிரபலங்கள் – வைரலாகும் எக்ஸ் பதிவுகள்!
கருப்புImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 14 May 2026 19:54 PM IST

தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்கள் அதிகம் எதிபார்த்து காத்திருந்த கருப்பு படம் இன்று திரையரங்குகளில் வெளியாவதாக இருந்தது. ஆனால் தயாரிப்பாளரின் சில நிதி பிரச்சனை காரணமாக குறிப்பிட்டபடி இன்று படம் திரையரங்குகளில் வெளியாகாமல் போனது. நடிகர் சூர்யா நடிப்பில் உருவான இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பை வைத்து இருந்ததால் படம் வெளியாகாமல் போனது அவர்களிடையே வேதனையை ஏற்படுத்தியது. மேலும் புதுச்சேரி மாநிலத்தில் சூர்யாவின் ரசிகர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது. இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தனது இயக்கத்தில் உருவான கருப்பு படம் திரையரங்குகளில் வெளியாகாமல் போனதால் வருத்தத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் மிகவும் உடைந்து பேசியது ரசிகர்களிடையே மட்டும் இன்றி தமிழ் சினிமா பிரபலங்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கருப்பு படத்திற்கு ஆதரவாக பிரபலங்கள் பலர் தங்களது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு தற்போது தொடர்ந்து இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கருப்பு படத்திற்கு ஆதரவாக தனுஷ் வெளியிட்ட பதிவு:

சூர்யா சாரும், ‘கருப்பு’வும் ஒரு முறையான திரையரங்க வெளியீட்டிற்குத் தகுதியானவர்கள். சிக்கல்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டு, இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று நான் பெரிதும் நம்புகிறேன்.

கருப்பு படத்திற்கு ஆதரவாக கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட பதிவு:

கருப்பு படம் அனைத்துத் தடைகளையும் கடந்து, நிச்சயமாக ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும். சூர்யா சார், ஆர்.ஜே. பாலாஜி மற்றும் முழு படக்குழுவினருக்கும் மேலும் பலம் சேரட்டும்.

கருப்பு படத்திற்கு ஆதரவாக வெங்கட் பிரபு வெளியிட்ட பதிவு:

‘கருப்பு’ திரைப்படம் பெரிய திரையில் அனுபவிக்கப்பட வேண்டிய ஒன்று. அனைத்தும் விரைவில் நல்லபடியாக அமைந்து, இத்திரைப்படம் உண்மையில் எத்தகைய கொண்டாட்டத்திற்குத் தகுதியோ அத்தகைய முறையில் பார்வையாளர்கள் திரையரங்குகளில் இதனைச் சிறப்பிக்க வேண்டும் என்று நம்புகிறேன். கடவுள் இருக்கிறார். சூர்யா அண்ணா மற்றும் ஆர்ஜே பாலாஜி.

கருப்பு படத்திற்கு ஆதரவாக ஹலிதா ஷமீம் வெளியிட்ட பதிவு:

‘நம்பிக்கை மட்டுமே ஒரே வழி’ என்ற தத்துவத்தை வாழ்வியலாகக் கொண்ட ஒருவரை, அழுதுகொண்டிருக்கும் நிலையில் பார்ப்பது நெஞ்சைப் பிழிகிறது. உங்களுக்கு மேலும் வலிமை சேரட்டும், ஆர்.ஜே. பாலாஜி.

கருப்பு படத்திற்கு ஆதரவாக சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட பதிவு:

இந்தச் சோதனையான காலகட்டத்தில், ‘கருப்பு’ குழுவினருக்கு எங்களது அன்பையும், பிரார்த்தனைகளையும், முழுமையான ஆதரவையும் அனுப்புகிறோம். மன உறுதியுடன் இருங்கள், மச்சி ஆர்ஜே பாலாஜி நீங்கள் எங்கு பணியாற்றினாலும், கருப்பசாமியின் அருளோடு நாம் நிச்சயம் கொண்டாடுவோம்.

Also Read… ஜாலியா நீ வாடி இது பிரைவேட் பார்ட்டி தான் – 4 ஆண்டுகளைக் கடந்தது சிவகார்த்திகேயனின் டான் படம்!

கருப்பு படத்திற்கு ஆதரவாக ஜிவி பிரகாஷ் குமார் வெளியிட்ட பதிவு

‘கருப்பு’ குழுவிற்கும், சூர்யா சார் அவர்களுக்கும் இது ஒரு சவாலான காலகட்டம். திரைப்படம் வெற்றிகரமாக வெளியாவதற்குத் தேவையான அனைத்தும் விரைவில் சீராகும் என்று நம்புகிறோம். சூர்யா ஐயா, நாங்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம். திருட்டுப் பிரதிகளை ஆதரிக்காதீர்கள்.

Also Read… சம்பளம் கூட வாங்காமல் கருப்பு படத்தில் கேமியோ வேடத்தில் மலையாள நடிகர்.. அட இவர்தான்!

Follow Us