இதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்று கூறியதையெல்லாம் தகர்த்தெறிந்து… முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து கூறிய இயக்குநர் சங்கர்
Director Shankar extended his wishes to Vijay | தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்று தற்போது முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள தளபதி விஜய் அவர்களுக்கு இயக்குநர் சங்கர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தற்போது தமிழக அரசியலிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார் தளபதி விஜய். அதன்படி நடந்து முடிந்த 2026-ம் ஆண்டிற்கான தமிழக சட்டமன்ற தேர்தலில் தளபதி விஜயின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அதிகப்படியான இடங்களில் வெற்றிப் பெற்று தற்போது ஆட்சியை அமைத்துள்ளது. அதன்படி நடிகர் தளபதி விஜய் தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். முதலமைச்சராக பதவியேற்ற உடனேயே பல திட்டங்களில் கையெழுத்து இட்டு மக்களிடையேயும் பிரபலங்களிடையேயும் வாழ்த்துகளைப் பெற்று வருகிறார் முதலமைச்சர் சி ஜோசப் விஜய். தொடர்ந்து சட்டமன்ற கூட்டத் தொடர்களிலும் ஆளும் கட்சி தலைவர் விஜயின் பேச்சுகள் அதிக அளவில் இணையத்தில் வெளியாகி மக்களிடையே வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றதற்கு மக்களும் திரையுலக பிரபலங்களும் தொடர்ந்து தங்களது வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும் விஜயின் திட்டங்களை வரவேற்று நடிகர்கள் விஷால், கமல்ஹாசன் உள்ளிட்டோரும் தங்களது மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் பதிவிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய சினிமாவில் மக்களால் அதிக அளவில் வரவேற்பைப் பெறும் இயக்குநராக உள்ள இயக்குநர் சங்கர் தனது எக்ஸ் தள பக்கத்தில் விஜய் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.




முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து கூறிய இயக்குநர் சங்கர்:
அந்தப் பதிவில் இயக்குநர் சங்கர் கூறியதாவது, இதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்று கூறியதையெல்லாம் தகர்த்தெறிந்து, லட்சியமும் செயலும் ஒன்று சேர்ந்தால் எதுவும் சாத்தியம் என்று நிரூபித்துள்ளீர்கள். மாண்புமிகு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். மக்களின் விருப்பம் நிறைவேறிவிட்டது; நீங்களும் மிகச் சிறப்பானதொரு தொடக்கத்தைப் பெற்றுள்ளீர்கள். தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள், சகோதரா என்று அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி மக்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… ஃபஹத் ஃபாசிலை வைத்து நான் எடுக்கும் படம் இப்படிதான் இருக்கும் – இயக்குநர் பிரேம் குமார் அப்டேட்!
இயக்குநர் சங்கர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
இதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்று கூறியதையெல்லாம் தகர்த்தெறிந்து, லட்சியமும் செயலும் ஒன்று சேர்ந்தால் எதுவும் சாத்தியம் என்று நிரூபித்துள்ளீர்கள். மாண்புமிகு முதலமைச்சர் திரு @CMOTamilnadu @TVKVijayHQ அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
The people’s wish…
— Shankar Shanmugham (@shankarshanmugh) May 13, 2026
Also Read… இரண்டு நாட்களில் கருப்பு பட ட்ரெயலர் செய்த சாதனை – கொண்டாட்டத்தில் படக்குழு