AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அடுத்த வாரம் தொடங்கும் சேயோன் படத்தின் ஷூட்டிங்… ரிலீஸ் எப்போது தெரியுமா?

Sivakarthikeyans Seyon Movie Release Update Is Viral On Social Media: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் சேயோன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க உள்ள நிலையில் படம் எப்போது வெளியாகும் என்று தகவல்கள் வைரலாகி வருகின்றது.

அடுத்த வாரம் தொடங்கும் சேயோன் படத்தின் ஷூட்டிங்… ரிலீஸ் எப்போது தெரியுமா?
சேயோன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 12 May 2026 12:42 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் உருவாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் பராசக்தி. இயக்குநர் சுதா கொங்கரா எழுதி இயக்கிய இந்தப் படத்தில் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தி திணிப்பை எதிர்த்து தமிழகத்தில் நடைப்பெற்ற போராட்டங்களை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி இருந்தது. படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் எந்த இயக்குநரின் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவர் இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கும் படத்தில் நடிப்பதாக ஒப்பந்தம் ஆனார்.

இந்தப் படத்தை நடிகர் கமல் ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகின்றது. நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் அறிமுக வீடியோ முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் அடுத்தடுத்த அப்டேட்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அடுத்த வாரம் தொடங்கும் சேயோன் படத்தின் ஷூட்டிங்:

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 26-வது படமாக உருவாக உள்ள சேயோன் படத்தின் படப்பிடிப்பு பணிகள் வருகின்ற வாரம் தொடங்கப்பட உள்ளது. மேலும் சேயோன் படத்தின் படப்பிடிப்பு பணிகளை விரைவாக முடித்துவிட்டு வருகின்ற அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டே படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு தீவிரம் காட்டி வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வைரலாகி வருகின்றது. இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… Kriti Sanon: ராஷ்மிகாவிற்கு அந்த பழக்கமே கிடையாது – கிரிதி சனோன் பேச்சு!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… கருப்பு பட ப்ரீ ரிலீஸ் ஈவெண்டில் கலந்துகொள்ள சூர்யா உடன் சென்ற பிரபல இயக்குநர் – வைரலாகும் போட்டோ

Follow Us