ஊழல்.. சாராயம் காச்சினால் நல்ல அரசியல்வாதியா? விஜய்க்கு ஆதரவாக பேசி வீடியோ வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்!
Baakiyalakshmi Serial Actor Sathish Kumar: தமிழ் மக்கள் மத்தியிலும் மிகவும் நெருக்கமானவராக இருந்துவருபவர் தளபதி விஜய். இவர் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று, முதல் அமைச்சராக தகுதிபெற்றிருந்த நிலையிலும், இன்னும் பதவியேற்கவில்லை. இதனு ல் பல பிரச்சனைகள் இருந்துவரும் நிலையில், விஜய்க்கு ஆதரவாக பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் சதீஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றாக இருந்துவந்தது பாக்கியலட்சுமி (Baakiyalakshmi). இந்த் சீரியலானது கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவந்தது. எப்போதுமே டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5 இடத்தில் ஒரு இடத்தை இந்த சீரியல் பிடித்துவந்த நிலையில், தற்போது விஜ டிவியில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டுவருகிறது. இந்த சீரியலில் நடிகை சுசித்திரா ஷெட்டி (Suchitra Shetty) பாக்யலட்சுமியாகவும், நடிகர் சதீஸ் குமார் (Sathish Kumar) கோபியாகவும் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதிருந்தனர். அந்த வகையில் இந்த் சீரியல் நிறைவடைந்த நிலையிலும், மக்கள் மத்தியில் மீண்டும் பார்க்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் சமீபகாலமாக தமிழகத்தில் முதலமைச்சராகப்போவது யார் என கேள்விகள் எழுந்துவருகிறது.
தவெக தலைவர் விஜய், அதிக டெபாசிட் கொண்ட கட்சியாக இருக்கிறார் . அந்த வகையில் இவர் ஆட்சியமைக்க பல பிரச்சனைகள் இருக்கும் நிலையில், அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதத்தில், சீரியல் நடிகர் சதீஸ் குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள்… கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விஜய் தேவரகொண்டா – வைரலாகும் வீடியோ!




தளபதி விஜய்க்கு ஆதரவாக பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் சதீஸ் குமார் பேசியுள்ளார் :
அவர் பேசி வெளியிட்ட வீடியோவை, அரசியல் வரவேண்டும் என்றால் ஊழல் செய்திருக்கணுமா?, ரௌடியா இருக்கணுமா?, சாராயம் காய்ச்சியிருக்கணுமா?, தவறு செய்திருக்கணுமா, அதுதான் தகுதியா? என அதில் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் அதில் அவர் சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறக்கும் ஆட்சியமைப்பதற்காக இழுபறி நடந்துவருகிறது என அதில் தெரிவித்துள்ளார். மேலும் ஜாதி , மதம், இனம் கடந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணம் இருப்பதே தலைவருக்கான உண்மையான தகுதி என்றும் அதில் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: சூர்யா ரசிகர்களே தயாரா? கருப்பு படத்தின் டிக்கெட் புக்கிங் எப்போது தொடக்கம் தெரியுமா?
மேலும் பேசிய சீரியல் நடிகர் சதீஸ் குமார், நான் இரட்டை இலைக்குத்தான் ஒட்டு போட்டதாகவும். அது அந்த கட்சிக்காக இல்லை, எம்.ஜி.ஆர். மீது இருந்த மரியாதைக்காக மட்டுமே. இப்போது தனியாக நின்று ஜெயித்த இளைஞனுக்கு வாய்ப்பு கொடுத்துபார்க்கவேண்டும். அவர் சரியல்ல செய்யப்படாவிட்டால், அதை பிறகு மக்களே பார்த்துக்கொள்ளட்டும். மேலும் அதில் பாரிய காட்சிகள் இணைந்து ஆட்சியமைக்க போவதாக வெளியான அகவல் மனதிற்கு வேதனை அளிக்கிறது என்று அதில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் சதீஸ் குமார் வெளிப்படையாக தெரிவித்திருந்தார். இதையும் படிங்க: தற்போது இந்த விஷயமானது விஜய்யின் ரசிகர்கள் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.