AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு விடாமல் பெய்யப்போகும் மழை.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை!!

Tamilnadu Weather Update: தமிழ்நாட்டில் வளிமண்டல சுழற்சி மற்றும் பருவமழை தீவிரமடை காரணமாக, அடுத்த ஒரு வாரத்திற்கு (7 நாட்களுக்கு) பரவலாக மழை நீடிக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு விடாமல் பெய்யப்போகும் மழை.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை!!
மாதிரி புகைப்படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 09 Aug 2026 06:31 AM IST

Tamilnadu Weather today: தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 5.8 கிமீ முதல் 7.6 கிமீ உயரம் வரை வட கடலோர தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. ஏற்கெனவே, சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், குளிர்ச்சியான சூழல் நிலவி மக்களுக்கு சற்று ஆறுதல் கிடைத்தது.

மேலும் படிக்க: பழனி நில முறைகேடு வழக்கு குற்றவாளி சிறை மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.. தவாக வேல்முருகன்!

இன்று மழைக்கு வாய்ப்பு:

அந்தவகையில், இன்று (ஆக.09) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு:

மேலும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வரும் 10ம் தேதி மிதமான மழையும், வரும் 11 முதல் 14ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை மாற்றம்:

அதேபோல், இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு என்றும், வரும் 10 முதல் 12ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் வட உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: தொகுதி மறுசீரமைப்பு.. முதல்வர் விஜய் தலைமையில் எம்பிக்கள் கூட்டம் தொடக்கம்! திமுக- அதிமுக புறக்கணிப்பு!

சென்னை வானிலை நிலவரம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Follow Us