AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பழனி நில முறைகேடு வழக்கு குற்றவாளி சிறை மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.. தவாக வேல்முருகன்!

TVK Velmurugan : பழனி தண்யாயுதபாணி முருகன் கோயில் நில முறைகேடு வழக்கில் கைதான குற்றவாளி சிறையில் உயிரிழந்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக தமிழ வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியவற்றை இந்தப் பதவில் விரிவாக பார்க்கலாம்.

பழனி நில முறைகேடு வழக்கு குற்றவாளி சிறை மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.. தவாக வேல்முருகன்!
சிறையில் மரணமடைந்த வழக்கறிஞர்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 08 Aug 2026 20:54 PM IST

பழனி தண்டாயுதபாணி முருகன் கோவில் நில முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியான அன்வர்தீன் மதுரை மத்திய சிறையில் திடீரென உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பழனி நிலைமை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அன்வர்தீன் சிறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பி உள்ளது. கோவில் சொத்து முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவர் நீதிமன்ற காவலில் இருந்த போது உயிரிழந்த சம்பவம் சாதாரணமாக கடந்து செல்ல முடியாது. இதே வழக்கில் கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உடல் நல குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது ஆகிய நிகழ்வுகளை அரசு மிகுந்த பொறுப்புடன் அணுக வேண்டும்.

பழனி நில முறைகேட்டில துணை நின்ற அதிகாரிகள் யார்

அன்வர்தீன் உயிர் இழப்புக்கு முன்னதாக அவரது உடல்நிலை எப்படி இருந்தது. சிறையில் அவருக்கு முறையான மருத்துவ கண்காணிப்பு இருந்ததா. உடல் நல குறைவு ஏற்பட்டபோது மருத்துவ உதவி வழங்கப்பட்டதா. சிறையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் என்ன சொல்கின்றன என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டியது கடமையாகும். அதேவேளையில் இந்த மரணத்தை முன்னிறுத்தி கோவில் நில மோசடியின் அடிப்படை குற்றச்சாட்டை மறந்துவிடக்கூடாது. கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் எவ்வாறு முறைகேடான ஆவணங்களின் மூலம் கை மாறியது. அதற்கு துணை நின்ற அதிகாரிகள் யார்.

மேலும் படிக்க: தொகுதி மறுவரையறை: எம்பிக்கள் கூட்டத்தில் பேசப்பட்டது என்ன! பரபரப்பு தகவல்கள்!

சிறை மரணம் சந்தேகங்களை எழுப்புகிறது

பத்திரப்பதிவு நடைமுறையில் எவ்வாறு விதிமீறல்கள் நிகழ்ந்தன. இதற்கு பின்னால் அதிகாரிகளின் தலையீடு ஏதேனும் இருந்ததா. ஆவணங்களில் கையெழுத்திட்டவர்களை மட்டும் விசாரிப்பது போதாது. அந்த ஆவணங்களின் பின்னால் இருந்த முழு அதிகார சங்கிலியையும் விசாரணை செய்ய வேண்டும். சிறை காவலில் இருந்த ஒருவர் உயிரிழந்ததை சுற்றிலும் பல்வேறு சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் அளிக்காமல் இருப்பதையும், கோவில் சொத்து முறைகேட்டின் பின்னணியில் உள்ள பெரிய வலையமைப்பை விசாரிக்காமல் இருப்பதையும் தவாக கண்டிக்கிறது.

பிரேத பரிசோதனை அறிக்கையை வெளியிட வேண்டும்

அன்வர்தீன் மரணம் குறித்து எழும் சந்தேகங்களுக்கு சுயாதீனமான, வெளிப்படையான விசாரணை மேற்கொள்ள வேண்டும். அவரின் பிரேத பரிசோதனை அறிக்கையை வெளிப்படையாக வெளியிட வேண்டும். சிறை மருத்துவ பதிவுகள் மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை உரிய விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: தவெகவில் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு அங்கீகாரம்.. கட்சி தலைமை கொடுத்த கிப்ட்!

Follow Us