AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. எங்கெல்லாம்?

Rainfall Alert: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸையும் ஒட்டியிருக்கும்.

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. எங்கெல்லாம்?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 23 Sep 2026 14:42 PM IST

செப்டம்பர் 23, 2026: மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று (செப்டம்பர் 22) மாலை 5.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்த இந்த அமைப்பு இன்று (செப்டம்பர் 23) காலை 8.30 மணியளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது.

இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை இன்று இரவு விசாகப்பட்டினம் மற்றும் கோபால்பூர் இடையே, கலிங்கப்பட்டினம் அருகே கரையைக் கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் மையப்பகுதியிலிருந்து சுமார் 7.6 கி.மீ உயரம் வரை, தாய்லாந்து வளைகுடா வரையிலும் மத்திய வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகள் வழியாக காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.

மேலும் படிக்க: “உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்”.. கோவை விமான நிலையத்தில் சிங்கப்பூர் பயணிகளிடம் அதிரடிப் பறிமுதல்!

தமிழகத்தில் மழை முன்னறிவிப்பு:

செப்டம்பர் 23: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.

செப்டம்பர் 24: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

செப்டம்பர் 25 மற்றும் 26: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுச்சேரியிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

மேலும் படிக்க: வீரமணியின் வீடு, அலுவலகங்களில் போலீஸ் சோதனை – திடுக்கிடும் தகவல்கள்

செப்டம்பர் 27: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

செப்டம்பர் 28 மற்றும் 29: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக பகுதிகள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை வானிலை:

இன்று (செப்டம்பர் 23) சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸையும் ஒட்டியிருக்கும்.

 

Follow Us