AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“காய்ச்சல் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்!”.. பெற்றோர்களுக்கு தமிழக அரசு தீவிர எச்சரிக்கை!

Tamil Nadu Health Advisory: தமிழகத்தில் வைரஸ் மற்றும் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வரும் நிலையில், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் எனப் பொதுச் சுகாதாரத் துறை தீவிர அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. ஒரே நாளில் 301 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு வழிகாட்டுதல்களையும் அரசு வெளியிட்டுள்ளது.

“காய்ச்சல் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்!”.. பெற்றோர்களுக்கு தமிழக அரசு தீவிர எச்சரிக்கை!
கோப்புப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 23 Sep 2026 12:52 PM IST

தமிழகம் முழுவதும் தட்பவெப்ப நிலை மாற்றம் மற்றும் பருவகால மாற்றங்கள் காரணமாகப் பரவலாக வைரஸ் காய்ச்சல், ஃபுளூ மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஒருவருக்குக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால், அது உடனடியாகக் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும், பள்ளிகளில் பயிலும் சக மாணவர்களுக்கும் வேகமாகப் பரவும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக, மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சலின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், பொதுச் சுகாதாரத் துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் இணைந்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்நிலையில், காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களையும் மாணவர்களையும் பாதுகாக்கவும் சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு முக்கியமான வழிகாட்டு நெறிமுறைகளும் எச்சரிக்கைகளும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

இதையும் படிக்க: ”13 வயது இருக்கும்போதே அத்துமீறினார்!”.. ஜெம் வீரமணி வழக்கில் கைதான பெண் பகீர் குற்றச்சாட்டு!

பெற்றோர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்:

காய்ச்சல், இருமல் அல்லது உடல் சோர்வு போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பெற்றோர்கள் எக்காரணத்தைக் கொண்டும் பள்ளிகளுக்கு அனுப்பக் கூடாது எனச் சுகாதாரத் துறை திட்டவட்டமாகக் கேட்டுக்கொண்டுள்ளது. நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பள்ளிக்கு வரும்போது, அவர்களுடன் வகுப்பறையில் ஒன்றாக இருக்கும் சக மாணவர்களுக்கும் மிக எளிதாக நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே, காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் குழந்தைகளுக்கு உடனடியாக உரிய ஓய்வு வழங்கி, மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தீவிரமடையும் டெங்கு பரவல், தடுப்பு நடவடிக்கைகள்:

மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் 301 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டில் இதுவரை டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,649 ஆக உயர்ந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. இந்தச் சூழ்நிலையைக் கட்டுப்படுத்தச் சுகாதாரத் துறை மற்றும் நகராட்சித் துறையின் களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று கொசு உற்பத்தி தடுப்பு மற்றும் காய்ச்சல் கண்காணிப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் தங்கள் வீடுகளைச் சுற்றியும், மொட்டை மாடிகளிலும் நன்னீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அவதூறு வழக்கு… நீதிமன்றத்தில் மு.க. ஸ்டாலின் கொடுத்த பதிலடி.. முழு விவரம்!

முகக்கவசம் மற்றும் மருத்துவ வழிகாட்டுதல்கள்:

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் பொது இடங்களுக்கும் பள்ளிகளுக்கும் செல்லும்போது முகக்கவசம் அணிவது நல்லது எனச் சுகாதாரத் துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படவில்லை என்றாலும், தொற்று மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்கவும், தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் இது மிகவும் அவசியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளைக் தீவிரமாகச் பரிசோதித்து, அது எந்த வகையான காய்ச்சல் என்பதைக் கண்டறிந்து உடனடியாகப் பொதுச் சுகாதாரத் துறை இயக்ககத்திற்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அனைத்து மருத்துவமனைகளுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.

Follow Us