கோவையில் லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் இடங்களில் ED அதிரடி சோதனை!
E D Raids Lottery Tycoon Martin Premises : கோயம்புத்தூர் மாவட்டத்தில் லாட்டரி தொழிலதிபர் சாண்டியாகோ மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. இதில், பல்வேறு ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது .
தமிழகத்தில் லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டின் என்பவர் சட்டவிராத பணம் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சனிக்கிழமை ( ஆகஸ்ட் 8- ஆம் தேதி) அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், லாட்டரி அதிபர் மாட்டினுக்கு சொந்தமான இடங்கள், அலுவலகங்கள் மற்றும் அவர் தொடர்புடைய நபர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய அரசியல் கட்சி நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இந்த சோதனை நடந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
சட்டப்பேரவையில் லாட்டரி அதிபர் மீதான விவாதம்
தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தின் போது, கடந்த திமுக ஆட்சியில் லாட்டரி அதிபர் மார்ட்டின் ரூ.900 கோடி வழங்கியது தொடர்பாக பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் மாமனாரான மார்ட்டினிடம் கேட்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். அப்போது, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எழுந்து, இந்த பண பரிமாற்றம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது, ரூ.900 கோடியை வாங்கிய திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினிடம் நான் கேட்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: விபத்துகளில் முதலிடம் – காப்பாற்றுவதில் கடைசி இடம் – தமிழ்நாட்டுக்கு என்ன ஆச்சு?




மார்ட்டின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
இந்த விவாதம் நடைபெற்ற மறுநாளே லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை மேற்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக வெற்றிக் கழக அரசு அமைந்த முதல் கூட்டத்தொடரில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கட்சி நிதி தொடர்பாக விவாதம் மேற்கொண்டிருந்தார். அப்போது, திமுகவை சேர்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவையை புறக்கணித்து வெளியேறி இருந்தனர்.
முக்கிய ஆவணங்கள் கைப்பற்றல்
தற்போது, பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, கட்சி நிதி குறித்த பேச்சு மீண்டும் எழுந்துள்ளது. அமலாக்க துறையின் இந்த அதிரடி சோதனையில் முக்கியமான ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்