விபத்துகளில் முதலிடம் – காப்பாற்றுவதில் கடைசி இடம் – தமிழ்நாட்டுக்கு என்ன ஆச்சு?
:இந்தியாவில் அதிக சாலை விபத்துகள் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ள நிலையில், விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை மீட்டு அவர்களது உயிரைக் காப்பாற்றுகிறவர்களின் லிஸ்டில் தமிழ்நாட்டுக்கு கடைசி இடம் கிடைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, ஆகஸ்ட் 8 : இந்தியாவில் அதிக சாலை விபத்துகள் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ள நிலையில், விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை காப்பாற்றுகிறவர்களின் லிஸ்டில் தமிழ்நாட்டுக்கு கடைசி இடம் கிடைத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் வெறும் 19 பேர் மட்டுமே விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அவர்களது உயிரைக் காப்பாற்றியுள்ளதாக மத்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதில் தமிழகத்துக்கு கடைசி இடம்
பொதுவாக விபத்து நடந்த முதல் 60 நிமிடங்களை மருத்துவர்கள் கோல்டன் ஹவர் என அழைக்கின்றனர். இதனால் அந்த நேரத்திற்குள் காயமடைந்தவர்களுக்கு கிடைக்கும் முதலுதவியும், உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதும் தான் அவர்களது உயிரைக் காப்பாற்ற உதவும்.
இதையும் படிக்க : சொத்து கேட்டு தாயை ‘தம்பல்ஸால்’ அடித்தே கொன்ற மகன்.. திருச்சியில் சோகம்!!




பொதுவாக விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதில் மக்களுக்கு இயல்பாகவே ஒரு தயக்கம் இருக்கிறது. காவல்துறையினருக்கு பதிலளிக்க வேண்டும் என்பது அதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விபத்தில் சிக்கியவர்களை எந்த பயமும் இன்றி மக்கள் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, கடந்த 2021 முதல் நல்ல சாமாரியன் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இந்த திட்டத்தின் மூலம் விபத்தில் சிக்கியவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமித்து அவர் உயிர் பிழைத்தால், காப்பாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழும், ரூ.5000 ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
இந்த வகையில் இந்தியாவில் சாலை விபத்து மரணங்களில் உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், பீகார், ஆந்திரா ஆகிய 8 மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. நாட்டில் சாலை விபத்தின்போது ஏற்படும் மரணங்களில் 3ல் 2 பங்கு தமிழ்நாட்டில் நிகழ்வதாக மத்திய சாலை போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட தகவலின்படி நல்ல சமாரியன் திட்டத்தின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் மாநில வாரியாக பயனடைந்தவர்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த திட்டத்தில் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அவர்களின் உயிரை காப்பாற்றியவர்கள் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது.
இதையும் படிக்க : சென்னையில் பரிதாபம்.. போதை மாத்திரையைக் கரைத்து ஊசி மூலம் நரம்பில் செலுத்திய 24 வயது இளைஞர் துடிதுடித்து பலி!
கடந்த 5 ஆண்டுகளில் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு உயிரைக் காப்பாற்றியதற்காக 244 பேர் ஊக்கத்தொகை பெற்றுள்ளனர். இந்த பட்டியிலில் தமிழ்நாடு கடைசி இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் இந்த திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை பெற்றவர்கள் வெறும் 19 பேர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு இல்லாததே இதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.