AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வறட்சி மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ரூ.288.97 கோடி ஒதுக்கீடு! தமிழக அரசு அரசாணை வெளியீடு..

நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தங்கு தடையின்றி லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் நீர்நிலைகளைத் தூர்வாரி புதுப்பிக்கவும், வறட்சியால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்களைத் தட்டுப்பாடின்றி வழங்கவும் இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது.

வறட்சி மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ரூ.288.97 கோடி ஒதுக்கீடு! தமிழக அரசு அரசாணை வெளியீடு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 08 Aug 2026 07:28 AM IST

ஆகஸ்ட் 8, 2026: தமிழ்நாட்டில் நிலவும் வறட்சி மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ரூ.288.97 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. எல் நினோ தாக்கம் மற்றும் பருவமழைப் பற்றாக்குறை காரணமாக ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க, மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து இந்த அவசர நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்தவும், வறட்சி நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது.

வறட்சி மற்றும் குடிநீர் தட்டுப்பாடு சமாளிக்க நிதி ஒதுக்கீடு:

அதன்படி, பேரூராட்சிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கவும், குடிநீர் விநியோகக் கட்டமைப்புகளைச் சீரமைக்கவும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு ரூ.58.55 கோடியும், ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.36.65 கோடியும், நகராட்சி நிர்வாகத் துறைக்கு ரூ.97.36 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தமிழகத்தில் தொடரும் மழை… சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தங்கு தடையின்றி லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் நீர்நிலைகளைத் தூர்வாரி புதுப்பிக்கவும், வறட்சியால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்களைத் தட்டுப்பாடின்றி வழங்கவும் இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது.

தீவிரமடையும் எல் நினோ:

இந்த ஆண்டின் தொடக்கம் முதல் தமிழகத்தின் காலநிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, எல் நினோ தாக்கத்தால் கடுமையான வெப்பநிலை மற்றும் வெப்ப அலை போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன. கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டியும் வெப்பநிலை பதிவாகி வருகிறது.

தென்மேற்குப் பருவமழை தொடங்கியிருந்தாலும், இந்த ஆண்டு பருவமழையின் அளவு இயல்பைவிடக் குறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது. எல் நினோ தாக்கம் காரணமாகவே இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க: திருச்செந்தூர் கோயிலில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பக்தர்.. அதிர்ச்சி சம்பவம்!

இந்நிலையில், பசிபிக் பெருங்கடலில் ‘சூப்பர் எல் நினோ’ உருவாகியிருப்பதாகவும், இது வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் மீண்டும் தீவிரமடையக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தீவிரமடைந்தால், கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தச் சூழலில், வறட்சி மற்றும் குடிநீர் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.288.97 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us