AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருச்செந்தூர் கோயிலில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பக்தர்.. அதிர்ச்சி சம்பவம்!

Tiruchendur Subramaniya Swamy Temple | திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 07, 2026) பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்துக்கொண்டு இருந்த நிலையில், ஒருவர் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டுள்ளார்.

திருச்செந்தூர் கோயிலில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பக்தர்.. அதிர்ச்சி சம்பவம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 08 Aug 2026 06:42 AM IST

திருச்செந்தூர், ஆகஸ்ட் 08 : திருச்செந்தூர் (Thiruchendur) சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் பக்தர் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மீட்பக்கட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருச்செந்தூர் கோயிலில் பக்தர் தற்கொலைக்கு முயன்ற பயங்கர சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்ட நபர்

திருச்செர்ந்தூர் சுப்பரமணி சுவாமி கோயில் மிகவும் சிறப்புமிக்கதாக உள்ளது. இதன் காரணமாக அந்த கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்துச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக வெள்ளிக்கிழமை, வார இறுதி நாட்களில் இந்த கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில் நேற்று (ஆகஸ்ட் 07, 2026) பக்தர்கள் மிக நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்துக்கொண்டு இருந்தனர்.

இதையும் படிங்க : தேனியில் பயங்கரம்.. காதல் வலையில் வீழ்த்தி சிறுமியை சீரழித்த சிறுவன்.. உடந்தையாக இருந்த பெற்றோர் கைது!

அப்போது கோயில் வளாகத்தில் சண்முகவிலாச மண்டபம் முன்பாக நின்றுக்கொண்டு இருந்த பக்தர் ஒருவர், திடீரென தனது உடலின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டுள்ளார். அதனை கண்டு கோயிலில் இருந்த சக பக்தர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், விரைந்துச் சென்று தண்ணீர் ஊற்றி அந்த நபரை பக்தர்கள் காப்பாற்றியுள்ளனர்.

மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த நபர்

தீக்குளித்ததில் இருந்து மீட்கப்பட்ட அந்த நபர், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், அவர் கள்தூரி புரத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் என்று தெரிய வந்துள்ளது. 38 வயதாகும் இவருக்கு திருமணமான நிலையில், குழந்தை இல்லை.

இதையும் படிங்க : ஆசிரியர்கள் கண்டிப்பு.. ரத்த அழுத்த மாத்திரைகள் உட்கொண்ட மாணவிகள்.. திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பு!

இவர் கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், கோயில் வளாகத்தில் சுற்றித் திரிந்த அவர், இத்தகைய செயலை செய்துள்ளார்.

Follow Us