AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை! பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கோரிக்கை!

மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்புபட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையானது, மேல்நிலைப் பள்ளித் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே நடைபெற வேண்டுமென வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார். அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை! பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கோரிக்கை!
பிரதமர் மோடி - முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Published: 07 Aug 2026 17:51 PM IST

சென்னை, ஆகஸ்ட் 7 : மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு (BVSc & AH) பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையானது, மேல்நிலைப் பள்ளித் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் அல்லது அந்தந்த மாநில அரசுகளால் தீர்மானிக்கப்படும் மாணவர் சேர்க்கை அளவுகோல்களின் அடிப்படையில் மட்டுமே நடைபெற வேண்டுமென வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை

இதுகுறித்து அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பரமரிப்பு (BVSc & AH) பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பான மிக முக்கியமான பொருண்மை குறித்து பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்திய கால்நடை மகுத்துவ கவுன்சில் ஈட்டம். 1984-ன் விதிமுறைகளின்படி, அனைத்து கால்நடை மருத்துவக் கல்லூரிகளிலும் கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையானது. பொது நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மையப்படுத்தப்பட்ட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என இந்திய கால்நடை மருத்துவ கவுன்சிங் பரிந்துரைத்துள்ளது.

இதையும் படிக்க : அவையில் அப்பாவை காணோம் என கூறிய அமைச்சர்.. கொதித்தெழுந்த திமுகவினர்!

அதற்கு மாற்று ஏற்பாடாக, மேற்படி 2026-27 கல்வியாண்டு முதல் தனியாக நுழைகத் தேர்வு நடத்த முடியாத பட்சத்தில், நீட் (NEET UG-2026) தேர்வின் தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் மாணவர் சேர்கை நடைபெறவேண்டும் என இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில், மாநிலங்களுக்கு அறிவுறுத்தியிருப்பது தனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த முன்மொழிவு. தமிழ்நாடு மாநிலத்திற்குப் பல்வேறு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். கால்நடை மருத்துவக் கல்வியானது தமிழகத்தின் வளர்ச்சிக்கான முன்னுரிமைகளில் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது என்று குறிப்பிட்டுள்ள அவர், கால்நடை மருத்துவக் கல்வி என்பது வெறும் தொழில்சார் படிப்பு மட்டுமல்ல.

மாறாக மாநிலத்தின் கால்நடை பராமரிப்பை வலுப்படுத்துவதற்கும், கால்நடைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும். பால்வள மேம்பாட்டினை வலுப்படுத்துவதற்கும். இலட்சக்கணக்கான கிராமப்புறக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்குமான நமது முயற்சிகளின் அடித்தளமாகும் என்றும். இன்று கால்நடை மருத்துவக் கல்வியில் சேர்க்கை பெறும் மாணவர்களே, வரும் ஆண்டுகளில் நமது விவசாயிகளுக்கும். கிராமங்கள் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறைக்கும் சேவை செய்யும் கால்நடை மருத்துவர்களாகவும் உருவெடுக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : சங்கீதாவிடம் 20 நிமிடம் விசாரணை… முதல்வர் விஜய்யின் விவாகரத்து வழக்கு ஒத்தி வைப்பு – என்ன நடந்தது?

தமிழ்நாடு. மேல்நிலைப் பள்ளித் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தொழிற்கல்விப் படிப்புகளுக்கான சேர்க்கை முறையை பல தசாப்தங்களாக பின்பற்றி வருகிறது. இந்த முறையானது திறமையான தொழில்முறை வல்லூர்களைத் தொடர்ந்து உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், கிராமப்புறங்கள், அரசுப் பள்ளிகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் மற்றும் சமூகரீதியாகப் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த தகுதியான மாணவர்களுக்கு. உயர்கல்வியைப் பெறுவதற்கான நியாயமான வாய்ப்பை உறுதிசெய்துள்ளது.

தேசியத் தேர்வுகள் முகமை . தீட் தேர்வுகளை நடத்துவதில் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருவதையும். அண்மையில் சில முறைகேடுகள் காரணமாக, தேர்வை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வு நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு மேற்படி முகமை ஆளான நிலையில், 2024-ஆம் ஆண்டில் வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணைக்கும் வழிவகுத்தன என்பதையும் கருத்தில்கொண்டு. கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நீட் தேர்வை அறிமுகப்படுத்துவது பொருத்தமானதாக இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us