AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அமைச்சர் கீர்த்தனாவுக்கு என்ன ஆச்சு? விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆதரவாக குரல் கொடுத்த கனிமொழி சந்தோஷ்..

அறுவை சிகிச்சைக்குப் பிறகும் வலி நிவாரணி மருந்துகள் எடுத்துக்கொண்டு, கட்டுடன் பணிக்குத் திரும்பி, நிறுவனங்களைச் சந்தித்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாகவும் கனிமொழி சந்தோஷ் குறிப்பிட்டுள்ளார். பெண்களின் தனிப்பட்ட உடல்நிலையை அரசியல் விமர்சனத்துக்குப் பயன்படுத்தும் போக்கு மாற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கீர்த்தனாவுக்கு என்ன ஆச்சு? விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆதரவாக குரல் கொடுத்த கனிமொழி சந்தோஷ்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 22 Sep 2026 19:04 PM IST

செப்டம்பர் 22, 2026: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சமீபத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றிருந்தார். இந்தப் பயணத்தில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா இடம்பெறாதது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அமைச்சர் கீர்த்தனாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டிய சூழல் இருந்ததாகவும் முதலமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அமைச்சர் கீர்த்தனாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த கனிமொழி சந்தோஷ்:


இந்நிலையில், அமைச்சர் கீர்த்தனாவுக்கு ஆதரவாக சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கீர்த்தனாவுக்கு காலர்போன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதைத் தொடர்ந்து காமாட்சி மருத்துவமனையில் தாம் சந்தித்ததாக குறிப்பிட்டுள்ளார். மருத்துவர்கள் சுமார் 20 நாட்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தியிருந்தபோதும், மாநிலத்தின் மீதான அர்ப்பணிப்பு காரணமாக 4 நாட்களிலேயே அவர் மீண்டும் பணிக்குத் திரும்பியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: TN 07 CM 2031- காரில் பயணித்த தொல்.திருமாவளவன்.. விடுதலை சிறுத்தைகள் கட்சி அளித்த விளக்கம்!

மருத்துவமனையில் இருந்தபோதுகூட முதலமைச்சரின் லண்டன் பயணத்துக்கான ஏற்பாடுகளை கீர்த்தனா ஒருங்கிணைத்ததாகவும், நிறுவனங்கள் மற்றும் ஏற்பாடுகள் சரியான நேரத்தில் நடைபெறுகிறதா என்பதையே அவர் தினமும் கவனித்ததாகவும் கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

பெண்கள் சந்திக்கும் சவால்களை புரிந்துக்கொள்ள வேண்டும்:

மேலும், அமைச்சர் உடல்நலக் குறைவால் சில நாட்கள் பணிக்கு வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டபோது, சிலர் அவரது உடல்நிலையைப் புரிந்துகொள்ளாமல் மாதவிடாய் தொடர்பான கருத்துகளை முன்வைத்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். பெண்களின் தனிப்பட்ட உடல்நிலை மற்றும் உடலியல் சார்ந்த விஷயங்களை அரசியல் விவாதமாக்காமல், அவர்கள் எதிர்கொள்ளும் உடல்நலப் பிரச்சினைகள், பணிச்சுமை மற்றும் சவால்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க: மதுவை விற்க கள்ளுக்கு தடையா? தமிழக அரசை வெளுத்து வாங்கிய சீமான்.. ஆவேசத்தில் கொந்தளிப்பு!

அறுவை சிகிச்சைக்குப் பிறகும் வலி நிவாரணி மருந்துகள் எடுத்துக்கொண்டு, கட்டுடன் பணிக்குத் திரும்பி, நிறுவனங்களைச் சந்தித்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாகவும் கனிமொழி சந்தோஷ் குறிப்பிட்டுள்ளார். பெண்களின் தனிப்பட்ட உடல்நிலையை அரசியல் விமர்சனத்துக்குப் பயன்படுத்தும் போக்கு மாற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us