சங்கீதாவிடம் 20 நிமிடம் விசாரணை… முதல்வர் விஜய்யின் விவாகரத்து வழக்கு ஒத்தி வைப்பு – என்ன நடந்தது?
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் சங்கீதா லண்டனில் இருந்து காணொளி வாயிலாக ஆஜராகி 20 நிமிடங்கள் நீதிபதியிடம் தனது வாதங்களை முன் வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் விஜய் ஆஜராகாத நிலையில் வழக்கு விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை, ஆகஸ்ட் 7 : தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தனது கணவர் விஜய்யிடம் இருந்து தனக்கு விவாகரத்து கோரி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் இருவரும் ஆஜராகாத நிலையில் வழக்கை ஜூன் 15, 2026 இன்று ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 15, 2026 விசாரணைக்கு வந்தபோது இருவரும் பிரபலங்கள் என்பதால் காணொளி வாயிலாக ஆஜராக இருவரது தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது.
முதல்வர் விஜய்யின் விவாகரத்து வழக்கு ஒத்தி வைப்பு
இதனையடுத்து இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் சங்கீதா லண்டனில் இருந்து காணொளி வாயிலாக ஆஜராகி 20 நிமிடங்கள் நீதிபதியிடம் தனது வாதங்களை முன் வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் தற்போது சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் முதல்வர் விஜய் ஆஜராகவில்லை.
இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. அடுத்தகட்ட விசாரணை தேதி ஆகஸ்ட் 7, 2026 இன்று மாலை அறிவிக்கப்படும் என நீதிபதி கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கில் இன்று முக்கிய தீர்ப்பு வெளியாகலாம் என்பதால் தமிழகமே இந்த வழக்கை எதிர்நோக்கி காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.




இதையும் படிக்க : “வாக்குறுதிகளை நிறைவேற்று!”.. தலைமைச் செயலகம் முன் கோணிப்பையைக் கட்டி விவசாயிகள் போராட்டம்.. குண்டுக்கட்டாகக் கைது!
விஜய் – சங்கீதா இடையே கடந்த 1999 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என இரு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் முதல்வர் விஜய்யுடனான கருத்து வேறுபாடு காரணமாக சங்கீதா பிரிந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விவாகரத்து கோரி, சங்கீதா செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த விவகாரம் தேர்தலுக்கு சற்று முன்னதாக பிப்ரவரி மாதம் வெளியாகி அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிக்க : காவிரி உரிமையில் எந்த சமரசமும் இல்லை; மேகதாது அணையை தடுக்க அனைத்து சட்ட நடவடிக்கைகளும் தொடரும்” – அமைச்சர் என். ஆனந்த் உறுதி
இந்த வழக்கில் தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் முதல்வர் விஜய் விவாகரத்து வழக்கில் இன்று ஆஜராகாத நிலையில் இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. லண்டனில் இருந்து சங்கீதா காணொளி காட்சி வாயிலாக ஆஜராகி நீதிபதியிடம் தனது வாதங்களை முன்வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கு அடுத்து விசாரணைக்கு வரும் தேதி ஆகஸ்ட் 7, 2026 இன்று மாலை அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.