AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நூதன முறையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் – தமிழ்நாடு முழுவதும் தீவிர சோதனை – இதுவரை 80 பேர் கைது

மோசடி செய்யப்படும் பணத்தைப் பரிமாற்றம் செய்வதற்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மணி மியூல் வங்கி கணக்குகள் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் சைபர் கிரைம் போலீசார் சிறப்பு சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் இதுவரை 80க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

நூதன முறையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம்  – தமிழ்நாடு முழுவதும் தீவிர சோதனை – இதுவரை 80 பேர் கைது
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 07 Aug 2026 19:00 PM IST

சென்னை, ஆகஸ்ட் 7 : மோசடி செய்யப்படும் பணத்தைப் பரிமாற்றம் செய்வதற்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மணி மியூல் வங்கி கணக்குகள் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் சைபர் கிரைம் போலீசார் சிறப்பு சோதனை மேற்கொண்டனர். சமீப காலமாக சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் அதிக பணம் வழங்குவதாக ஆசை வார்த்தைகளைக தெரிவித்து மக்களின் வங்கி கணக்குகளைப் பெறுவதாகவும், பின்னர் மோசடிகள் மூலம் பெறும் பணத்தை அந்த வங்கி கணக்குகளுக்கு அனுப்பி பணப்பரிமாற்றம் செய்வதாக கூறப்படுகிறது.

நூதன முறையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம்

தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற சைபர் குற்றங்களில் பயன்படுத்தப்படும் மணி மியூல் வங்கிக் கணக்குகளைக் கண்டறிந்து அந்த கணக்குகளின் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் தலைமையில் சென்னை, கிருஷ்ணகிரி, வேலூர், சேலம், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : கல்லூரி மாணவியிடம் காக்கி உடையில் அத்துமீறிய காவலர்.. கோவை காவல் ஆணையர் எடுத்த அதிரடி நடவடிக்கை!

முன்னதாக பல்வேறு வங்கி கணக்குகளில் சந்தேகத்துக்குரிய வகையில் பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்படும் வங்கி கணக்குகள் கண்டறியப்பட்டது. தற்போது இந்த வங்கி கணக்குகளின் உரிமையாளர்கள் 80க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் ஹைலைட் என்னவென்றால் ஆன்லைன் கேம்ஸ்கள் மூலம் சிலரது வங்கி கணக்குகளுக்கு ரூ.50,000, ரூ.1 லட்சம் என பணம் அனுப்பபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பணப்பரிமாற்றம் தொடர்பான விவரங்களை போலீசார் தீவிரரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் எவ்வாறு வந்தது? யார் பணத்தை அனுப்பியது? பின்னர் அந்தப் பணம் எந்தக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டது? என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, போலீசார் சிலரை கைது செய்து அழைத்து வந்தது தொடர்பாக தங்களுக்கு முன்கூட்டியே உரிய தகவல் தெரிவிக்கப்படவில்லை என அவர்களது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதையும் படிக்க : “டாஸ்மாக்கில் அதிகக் கட்டணம் வசூலித்தால் போலீசில் புகார் அளிக்கலாம்!”.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

தற்போது வரை தமிழ்நாடு முழுவதும் சைபர் கிரைம் போலீசார் மேற்கொண்ட சோதனையில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதானவர்களின் வங்கி கணக்குகள், அவர்களின் செல்போன் தொடர்புகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதிக பணம் கிடைக்கும் என்ற ஆசையில் பலர் மோசடிகாரர்களின் வலையில் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

Follow Us