கல்லூரி மாணவியிடம் காக்கி உடையில் அத்துமீறிய காவலர்.. கோவை காவல் ஆணையர் எடுத்த அதிரடி நடவடிக்கை!
Coimbatore Police Man Suspended : கோயம்புத்தூர் மாவட்டத்தில் தனியார் பேருந்தில் பயணித்த 19 வயது கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போலீஸ்காரர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் பிறப்பித்தார் .
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மணிவேந்தன் ( 32 வயது). இவர், கோயம்புத்தூர் மாவட்டம், போத்தனூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரின் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிவேந்தன் பொள்ளாச்சிக்கு சென்றிருந்தார். அங்கு, தனது பணிகளை முடித்துவிட்டு அவர் தனியார் பேருந்தில் கோயம்புத்தூர் திரும்பி சென்று கொண்டிருந்தார். இதனிடையே, கிணத்துக்கடவு பகுதியில் சுமார் 19 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவி ஒருவர் அந்த பேருந்தில் ஏறினார். அப்போது, பேருந்தின் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த அந்த மாணவி பேருந்தின் உள்ளே ஏறி வருவதற்கு சீருடை அணிந்திருந்த காவலரான மணிவேந்தன் உதவி செய்தார். அதன்படி, அந்த மாணவி காவலர் மதிவேந்தன் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, மதிவேந்தன் அந்த மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை அழைத்ததாக தெரிகிறது.
பேருந்தில் மாணவியிடம் அத்துமீறிய காவலர்
இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவி கத்தி கூச்சலிட்டார். உடனே, பேருந்தில் இருந்தவர்கள் திரண்டு வந்து காவலரை கண்டித்தனர். பின்னர், அனைவரும் அங்கிருந்து சென்று விட்டார். இதை தொடர்ந்து, மாணவி வீட்டுக்கு சென்ற நிலையில், தனக்கு காவலர் பாலியல் தொல்லை அளித்த விவகாரம் தொடர்பாக பெற்றோரிடம் புகார் அளித்துள்ளார். அதன்படி, மாணவியின் பெற்றோர் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மேலும் படிக்க: அவையில் அப்பாவை காணோம் என கூறிய அமைச்சர்.. கொதித்தெழுந்த திமுகவினர்!
போலீசார் கைது செய்த நிலையில் ஜாமீன்
அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து காவலர் மணி வேந்தனை கைது செய்தனர். தொடர்ந்து, அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், கல்லூரி மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததை ஒத்துக் கொண்டார். மேலும், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் காவலர் என்பதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆனால், அவரை நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது.
காவலரை சஸ்பெண்ட் செய்து ஆணையர் உத்தரவு
இந்த விவகாரம் காவல் ஆணையர் கண்ணன் கவனத்திற்கு சென்ற நிலையில், இது தொடர்பாக துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அதன்படி, காவல் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட நிலையில், இது தொடர்பான அறிக்கையை காவல் ஆணையர் கண்ணனிடம் சமர்ப்பித்தனர். இது தொடர்ந்து, போலீஸ்காரர் மணிவேந்தனை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் படிக்க: விருத்தாசலம் தனி மாவட்டம் ஆகிறதா? சட்டப்பேரவையில் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்!