AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஒரு கையில் லஞ்சம்.. மறு கையில் சான்றிதழ்.. கரூரில் ரூ.1000 லஞ்சம் கேட்ட விஏஓ அதிரடி கைது!

Karur VAO Arrested : கரூர் மாவட்டத்தில் வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கு ரூ. 1,000 லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர் .

ஒரு கையில் லஞ்சம்.. மறு கையில் சான்றிதழ்.. கரூரில் ரூ.1000 லஞ்சம் கேட்ட விஏஓ அதிரடி கைது!
கைதான கிராம நிர்வாக அலுவலர்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 06 Aug 2026 17:43 PM IST

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள வெங்கசாமாங்கூடலூர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் அன்புராஜ் ( 36 வயது). இவர், ராஜபுரம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், இதே பகுதியை சேர்ந்த அக்ரஹாரம் தெருவில் வசித்து வரும் கோபால் என்பவரது மகன் விபிலன் ( 28 வயது) வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக விண்ணப்பித்திருந்தார். அதற்கு, கிராம நிர்வாக அலுவலர் அன்புராஜ் ரூ.1,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், விபிலன் லஞ்சம் கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், கோபமடைந்த கிராம நிர்வாக அலுவலர் அன்புராஜ், ரூ.1,000 லஞ்சம் தரவில்லை எனில் வாரிசு சான்றிதழ் வழங்க முடியாது என்று கறாராக தெரிவித்ததாக தெரிகிறது. இதனால், விபிலன் லஞ்சம் கொடுக்க மறுப்பு தெரிவித்துவிட்டு வீடு திரும்பினார்.

ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகள்

பின்னர், மீண்டும் ஒரு நாள் கிராம நிர்வாக அலுவலர் அன்பு ராஜை நேரில் சந்தித்து வாரிசு சான்றிதழ் வழங்குமாறு தெரிவித்துள்ளார். ஆனால், அப்போதும் அன்புராஜ் தனக்கு ரூ. ஆயிரம் வழங்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார். இதில், உடன்படாத விபிலன் இது தொடர்பாக கரூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் ரசாயன பொடி தடவிய ரூ. நோட்டுகளை விபிலனிடம் வழங்கினர்.

மேலும் படிக்க: வேலூரில் பகீர் சம்பவம்.. சிறுமியை கடத்தி குடித்தனம் நடத்திய 2 பெண்டாட்டிகாரர்.. போக்சோவில் கொக்கி போட்ட போலீஸ்!

கிராம நிர்வாக அலுவலர் சுற்று வளைத்து கைது

அத்துடன், போலீசார் அறிவுறுத்தலின் அடிப்படையில், விபிலன் அந்த ரூபாய் நோட்டுகளை கிராம நிர்வாக அலுவலர் அன்பு ராஜி நேரில் சந்தித்தது வழங்கினார். அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு ஆய்வாளர் தலைமையிலான போலீசார் அன்பு ராஜை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், பலரிடம் அவர் லஞ்சம் பெற்றது தெரியவந்தது.

ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு

இதைத் தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலர் அன்புராஜ் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அவர் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க: பழனி நில முறைகேடு வழக்கு.. இடைக்கால ஜாமீன் திடீர் ரத்து.. சார்- பதிவாளர் அதிரடி கைது..!

Follow Us