மீண்டும் மீண்டுமா… உதயநிதி காரில் ஏற சென்ற எடப்பாடி.. சட்டப்பேரவையில் நிகழ்ந்த நிகழ்வு!
Edappadi Palaniswami : தமிழக சட்டப் பேரவை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் காரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஏற முயன்ற ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஏற்கெனவே, இது போன்ற நிகழ்வு நடந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று, விவசாய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் விஜய், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பேரவைக்கு வருகை தந்திருந்தனர். பிற்பகலில் பட்ஜெட் தாக்கல் நிறைவடைந்த நிலையில், பேரவை ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பேரவையில் இருந்து அனைவரும் புறப்பட்டு சென்றனர். அப்போது, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி எதிர்பாராத விதமாக அங்கு நிறுத்தப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் காரில் ஏற முயன்றார். அப்போது, பாதுகாப்பு பணியில் நின்று கொண்டிருந்த போலீசார், சார் இது உங்கள் கார் இல்லை. உங்களது கார் அங்கே நின்று கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார்.
உதயநிதி காரில் ஏற முயன்ற எடப்பாடி பழனிசாமி
இதை கேட்ட எடப்பாடி பழனிசாமி ஓ… சாரி என்று கூறிவிட்டு சிரித்துக் கொண்டேன் தனது காரை நோக்கி நடந்து சென்றார். சட்டப்பேரவை வளாகத்தில் நடந்த இந்த ருசிகரமான சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. ஏற்கனவே, கடந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நடைபெற்ற சட்டப்பேரவையின் போது, முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, உதயநிதியின் காரில் ஏற முயன்றார்.
மேலும் படிக்க: விவசாய பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மார்க்.. எடப்பாடி பழனிசாமி!
உதயநிதி காரில் 2 ஆவது முறையாக ஏற முயன்ற எடப்பாடி
அப்போது, அங்கிருந்தவர்கள் இது உங்கள் கார் இல்லை என்று அறிவுறுத்தினர். பின்னர், அவர் தனது காரில் ஏறி சென்றார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின், தனது காரை வேண்டுமானாலும் எடுத்துச் செல்லுங்கள், ஆனால், கமலாலயம் சென்று விடாதீர்கள் என்று நகைச்சுவையாக பேசி இருந்தார். இதற்கு எடப்பாடி கே. பழனிசாமி தங்களது கார் எப்போதும் அதிமுக அலுவலகம் நோக்கி தான் செல்லும் என்று தெரிவித்திருந்தார்.
4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ருசிகர நிகழ்வு
தற்போது, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எதிர்பாராத விதமாக உதயநிதி காரில் ஏற முயன்ற சம்பவம் சட்டப்பேரவை வளாகத்தில் ருசீகர நிகழ்வாக அமைந்தது. சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இது போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: திமுகவில் மற்றொரு கைது? முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரண்ட்.. செப். 2 வரை நீதிமன்றம் கெடு!